இந்தியாவிற்கு வரும் யூடியூப் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவை!

யூடியூப் மியூசிக் மூலம் உலகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்களின் எண்ணற்ற பாடல்களைக் கேட்டும், பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

Tamilarasu J | news18
Updated: March 13, 2019, 6:26 PM IST
இந்தியாவிற்கு வரும் யூடியூப் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவை!
Youtube மியூசிக்
Tamilarasu J | news18
Updated: March 13, 2019, 6:26 PM IST
பிரபல வீடியோ சேவை நிறுவனமான யூடியூப் தற்போது இந்தியாவில் ஆடியோ ஸ்ட்ரீமிங் துறையில் கால்பதித்துள்ளது.

உலகமெங்கும் GOOGLE MUSIC, AMAZON MUSIC, SPOTIFY, APPLE MUSIC, ஜியோ சாவன் போன்ற ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவைகள் பல்வேறு பிரபல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில், யூடியூப் மியூசிக் செயலியும் தற்போது இணைந்துள்ளது. இதற்காக மாதம் 99 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வீடியோ உடன் இசை சேவையையும் சேர்த்து பெற 129 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


ஆனால், இந்தியாவில் இந்தச் சேவையை மூன்று மாதத்திற்கு கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாகப் பயன்படுத்தலாம்.

Youtube பிரீமியம்


யூடியூப் மியூசிக் செயலியைக் குடும்பமாகவும் பயன்படுத்த முடியும். 6 நபர்கள் பயன்படுத்தக் கூடிய இந்தத் திட்டத்திற்கு மாதம் 189 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

Loading...

இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்களின் எண்ணற்ற பாடல்களைக் கேட்டும், பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

யூடியூப் பிரீமியம் மியூசிக் சேவையைப் பயன்படுத்தும் போது அதில் விளம்பரங்கள் ஏதும் வராது. பிரீமியம் சேவை செலுத்தினால் அதை வீடியோவிற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் யுடியூப் கூறியுள்லது.

மேலும் பார்க்க:
First published: March 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...