• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • யூடியூப் மியூசிக்கில் கட்டணம் செலுத்தாமல் பாட்டு கேட்போர் கவனத்திற்கு...

யூடியூப் மியூசிக்கில் கட்டணம் செலுத்தாமல் பாட்டு கேட்போர் கவனத்திற்கு...

யூடியூப் மியூசிக்

யூடியூப் மியூசிக்

இனி யூடியூப் மியூசிக் பிரிமியம் சந்தா செலுத்தி மட்டும்தான் பயன்படுத்த முடியுமா என்ற பலரின் மனதிலும் கேள்வி எழும்பியுள்ளது.

  • Share this:
யூடியூப் நிறுவனம், யூடியூப் மியூசிக்கில் சமீபத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதில் முக்கியமான மாற்றமாக, யூடியூப் மியூசிக் பிரீமியம் சப்ஸ்கிரைப் செய்யாதவர்களுக்கு சில அம்சங்கள் நீக்கப்படுகிறது. இலவச யூடியூப் மியூசிக் பயன்படுத்தி வரும் யூசர்கள் இனி யூடியூப் மியூசிக்கின் ஆடியோவை மட்டுமே கேட்க முடியும், வீடியோக்களை பார்க்க முடியாது. ப்ரீமியம் செலுத்தாத யூசர்களுக்கான இந்த கட்டுப்பாடுகளைப் பற்றி யூடியூப் மியூசிக் நிறுவனம் ஒரு விரிவான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

தற்போது, யூடியூபில் இரண்டு விதமான ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன்கள் உள்ளன -யூடியூப் ப்ரீமியம் சந்தா மற்றும் யூடியூப் மியூசிக் ப்ரீமியம் சந்தா. யூடியூப் ப்ரீமியம் சந்தாதாரர்கள் அல்லது யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தாதாரர்கள் மட்டுமே முழு அம்சங்களுடன் தளத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் சந்தா செலுத்தாதவர்கள் யூடியூப் மியூசிக்கின் சில முக்கியமான அம்சங்களான, பாடல்களுக்கு நடுவே அன்லிமிடெட் ஸ்கிப் செய்வது, ஆன்-டிமாண்ட் மியூசிக் தேர்வு ஆகிய அம்சங்களை பயன்படுத்த முடியாது.

இனி யூடியூப் மியூசிக் பிரிமியம் சந்தா செலுத்தி மட்டும்தான் பயன்படுத்த முடியுமா என்ற பலரின் மனதிலும் கேள்வி எழும்பியுள்ளது. சில அம்சங்கள் மட்டுமே சந்தா செலுத்தி உறுப்பினர் அல்லாதவர்களுக்கு நீக்கப்படுகின்றன என்றும், யூசர்கள் யூடியூப் மியூசிக்கை இலவசமாக கட்டணம் எதுவும் செலுத்தாமல் தளத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்களிடம் யூடியூப் மியூசிக் பிரீமியம் இல்லையா? இலவச யூடியூப் மியூசிக் தளத்தில் நீங்கள் என்னென்ன அம்சங்களை பயன்படுத்தலாம்?

பேக்ரவுண்ட் யூடியூப் மியூசிக்கை ஒலிக்க விடலாம். ஏற்கனவே இலட்சக்கணக்கான யூசர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த அம்சம் இனியும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும்.

உங்களின் தனிப்பட்ட இசைத் தொகுப்புகளை ஷஃபுல்(shuffle) செய்து ப்ளே செய்யலாம்:

உங்கள் விருப்பத்திற்கு அல்லது நீங்கள் செயல் செய்யும் செயலுக்கு ஏற்றவாறான கச்சிதமான மூட் மிக்ஸ் (mood mix) ப்ளே செய்யலாம். உதாரணமாக, நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்பினால், அதறகு ஏற்றது போல மூட் மிக்ஸ்‌ ஒலிக்கச் செய்யலாம். உங்கள் காரில் நீண்ட தூரம் பயணிக்கிறீர்கள் என்றால் அதற்கு ஏற்றார் போல பாடல்களை கேட்டுக் கொண்டே செல்லலாம்.

பாடல்களை இலவசமாக கேட்டு ரசிக்கலாம்:

நீங்கள் யூடியூப் பிரிமியம் அல்லது யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தாதாரராக இருந்தால் உங்களுக்கு பின்வரும் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படுகின்றது.

ஆன்-டிமாண்ட் என்ற அம்சத்தின் மூலம், நீங்கள் எந்த பாடலை எப்போது கேட்க விரும்பினாலும் அல்லது பார்க்க விரும்பினாலும் அதனை உடனேயே பார்க்க முடியும். யூடியூப் மியூசிக்கில் நீங்கள் வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம். நீங்கள் கேட்க விரும்பாத பாடல்களை அல்லது மியூசிக் டிராக்கை எத்தனை முறை வேண்டுமானாலும் ஸ்கிப் செய்யலாம்.

Also read... வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்ப்பது எப்படி?

யூடியூப் யூசர்களைப் பொறுத்தவரை இடையிடையே வரும் விளம்பரங்கள் சில நேரங்களில் இடையூறாகவே தோன்றுகின்றன. நீங்கள் யூட்யூப் பிரீமியம் சந்தா செலுத்தி இருந்தால் விளம்பரங்களின் இடையூறு இன்றி யூடியூப் மியூசிக்கை ரசிக்கலாம்.

இந்த புதிய மாற்றங்கள் அனைத்தும் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி முதல் கனடாவில் முதலில் அமல்படுத்தப்படுகிறது. கனடாவை தொடர்ந்து இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் மட்டும் இது நடைமுறைக்கு கொண்டு வர படலாம் என்று கூறப்படுகின்றன.

பிற நாடுகளில் யூடியூப் மியூசிக் எவ்வாறு செயல்படுத்தப்பட இருக்கிறது என்பதை நீண்ட கால திட்டத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்ய முடியும் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: