• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • போதிய வருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு ‘குட் பை’..! யூட்யூப்பர்ஸ் கலக்கம்

போதிய வருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு ‘குட் பை’..! யூட்யூப்பர்ஸ் கலக்கம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வணிக ரீதியாக வெற்றி பெறாத யூட்யூப் சேனல்களை மட்டுமல்லாது அவை பதிவிட்ட அத்தனை வீடியோக்களும் யூட்யூப் தளத்திலிருந்து நீக்கப்படும்

  • News18
  • Last Updated :
  • Share this:
யூட்யூப் தளத்தில் உள்ள சேனல்கள் போதிய அளவு சம்பாதிக்கவில்லை என்றால் அத்தகைய சேனல்களை எல்லாம் நீக்கப்போவதாக யூட்யூப் புதிய விதிமுறையை வடிவமைத்து வருகிறது.

வணிக ரீதியாக வெற்றி பெறாத யூட்யூப் சேனல்களை மட்டுமல்லாது அவை பதிவிட்ட அத்தனை வீடியோக்களும் யூட்யூப் தளத்திலிருந்து நீக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது உலக அளவில் பல ’யூட்யூபர்களை’ பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

சின்ன, வளர்ந்து வரும் யூட்யூபர்களைப் பலியாக்கி பெரும் சேனல்களை மட்டும் மீண்டும் வளர்க்க யூட்யூப் உதவுகிறது என சர்வதேச அளவில் பலரும் யூட்யூப் தளத்தின் மீது சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்குள்ளாகவே இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என யூட்யூப் சேனல்கள் மெயில் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறதாம்.

யூட்யூப் தளம் இப்புதிய விதியை வருகிற டிசம்பர் 10-ம் தேதி முதலே செயல்படுத்தத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: ‘இந்த’ ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தொல்லை தரும் வாட்ஸ்அப்..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: