உலகம் முழுவதுமே டிஜிட்டல் பொழுதுபோக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல காலமாக அதில் யூடியூப் வீடியோக்கள் கோலோச்சி வருகிறது. நாடு முழுவதும் பல விதமான குறுகிய வீடியோ பிளாட்ஃபார்ம்கள் வந்துவிட்டாலும், யூடியூப் முன்னணியில் இருந்து வருகிறது. குறிப்பாக கோவிட் காலத்தை பொறுத்தவரை பலரும் யூடியூப் சேனல்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். எவ்வாறு கூகுளில் நாம் ஒரு விஷயத்தை தேடுகிறோமோ அதே போல யூடியூபில் கிடைக்காத வீடியோக்களே இல்லை என்று கூறும் அளவுக்கு யூடியூப் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
யூடியூப் போலவே, சமீபத்தில் ஷார்ட் வீடியோ தளங்களும் பிரபலமாகி உள்ளன. அதையொட்டி, தனது வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் ஷார்ட்ஸ் என்று புதிய அம்சத்தை அறிமுகம் செய்து அதுவும் பிரபலமாகி வருகிறது!
யூடியூப் கிரியேட்டர்கள் எல்லாருமே பணம் சம்பாதிக்க முடியுமா?
மிகப்பெரிய வருமானம் ஈட்டும் வழியாகவும் இந்தத் தளம் மாறியுள்ளது. யூடியூப் சேனல்களில் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறார்கள் என்று பலருக்கும் கேள்விகள் இருக்கும். யார் வேண்டுமானாலும் யூடியூப்பில் சேனல் தொடங்கலாம், வீடியோக்கள் பதிவேற்றலாம், தனக்கென்று ரசிகர் படையை உருவாக்கலாம் ஆனால் வருமானம் ஈட்டுவது என்பது?
இதன் மூலம் இந்தியாவில் கிரியேட்டர்களுக்கும் கலைஞர்களுக்கும் பஞ்சமே கிடையாது என்று தோன்றும். அதை நிரூபிக்கும் வகையில் யூடியூபில் கிட்டத்தட்ட 8 கோடி கிரியேட்டர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
வேடிக்கைக்காக, ட்ரோல் செய்வதற்காக, பொழுதுபோக்குக்காக, அல்லது தகவல் பரிமாற்றத்துக்காக என்று எந்த காரணத்திற்கு வேண்டுமானாலும் யூடியூப் சேனல்களை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் ஒரு சிலர் அதை மிகவும் ப்ரொஃபஷனலாக நேர்த்தியாக செய்து வருகிறார்கள். அந்த வகையில், 1.5 லட்சம் ப்ரொஃபஷனல் யூடியூப் கிரியேட்டர்கள் உள்ளனர்.
Also Read : எல்லாமே அடடே ரகம்தான்! வாட்ஸ்அப்பில் வரப்போகும் 5 அசத்தல் அப்டேட்டுகள்.!
யூடியூப் வீடியோக்கள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
யூடியூபில் கொட்டிக் கிடக்கும் வீடியோக்களை உருவாக்குபவர்கள் அனைவருமே யூடியூபில் இருந்த பணம் சம்பாதிக்க முடியாது என்பதுதான் உண்மை.
வீடியோக்களைப் பொறுத்தவரை, எந்தவிதமான உள்ளடக்கங்களை பதிவேற்றுகிறார்கள், எந்த தகவல்களை பகிர்கிறார்கள், அது எவ்வளவு நபரை சென்றடைகிறது என்ற அடிப்படையில் யூடியூப்-இல் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு பணம் கிடைக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
சாதாரணமாக 8 கோடி கிரியேட்டர்களும், தொழில் முறையாக 1.5 லட்சம் கிரியேட்டர்களும் இருக்கும் யூடியூபில், ப்ரொஃபஷனலாக உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் தோராயமாக மாதம் 16,000 ரூபாய் முதல் மாதம் 2 லட்சம் ரூபாய் வரை சம்பதிகிறார்கள்.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருப்பவர்கள், மாதம் ₹53 லட்சம் சம்பாதிக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் வீடியோக்களை உருவாக்குவதே தங்களின் முழு நேர வேலையாக செயல்பட்டு வருபவர்களில் ஒரு சதவிகித்தினர் மட்டும் தான் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை வைத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.!
ஒரே ஒரு வீடியோ அல்லது ஒரே ஒரு ஷார்ட்ஸ் போட்டாலே அது லட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் வியூக்களை அள்ளும் சேனல்களை வைத்திருப்பவர்கள் மாதம் 80 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்க முடியும். ஆனால் இந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள் மிக மிகக் குறைவானவர்கள்தான்.
யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள்
யூடியூப்வின் புதிய பரிமாணமான ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்க 50,000 கிரியேட்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் 60 சதவீதத்தினர் பெருநகரங்களை சேர்ந்தவர்கள் இல்லை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது எப்படி இருந்தாலுமே சோஷியல் மீடியா தளங்களின் வளர்ச்சி, பலருக்கும் தங்களுடைய திறமைகளை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து, வருமானம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல், தனக்கென்று மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
Also Read : பட்ஜெட் விலையில் லேப்டாப்.. 4ஜி கார்டுடன் வரும் ‘ஜியோபுக்’ விலை என்னத் தெரியுமா.?
மேலும், தனிநபர்கள் குறைந்த அளவில் பணம் சம்பாதித்தாலும் கூட, அவர்களுக்கு என்று கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிராண்டு கிரியேட்டர்கள் அல்லது மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து இது எதுவுமில்லாமல் சாதாரண நபர்களுடைய உள்ளடக்கங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. அவ்வாறு யூடியூப்பில் வீடியோக்களை உருவாக்கத் தொடங்கியவர்கள் தான் தொழில்முறை ரீதியாக பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அம்சங்கள் இதற்கு உதவியாக இருக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil News, Technology, Youtube