• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • அரசியல், மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை - Youtube நிறுவனம் திடீர் முடிவு!

அரசியல், மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை - Youtube நிறுவனம் திடீர் முடிவு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விளம்பரங்களின் சங்கமமாக யூடியூப் மாறியதால், பவுடர், சாம்பு முதல் ஆன்லைன் கேம் வரையிலான விளம்பரங்களும், அரசியல் கட்சியினரின் விளம்பரங்களும் இடம்பெற்றது.

  • Share this:
அரசியல், மது, புகையிலை மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தொடர்பான விளம்பரங்கள் யூடியூப்பின் முகப்பு பக்கத்தில் இடம்பெறாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

யூடியூப் தளம் சாமானியர்கள் முதல் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை சம்பாதிக்கும் இடமாக மாறியுள்ளது. நல்ல கன்டென்ட் மற்றும் சப்ஸ்கிரைப்பர் இருப்பவர்களுக்கு வீடியோக்களின் பார்வை, விளம்பரம் உள்ளிட்ட வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும். பல்வேறு அல்காரிதங்களின் அடிப்படையில், கன்டென்ட்டுக்கு ஏற்றார்போல் யூடியூப் நிறுவனம் யூசர்களுக்கு பணம் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடையும் இடமாக மாறியதால், தங்களது பிராண்டுகளையும், பொருட்களையும் விளம்பரப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் யூடியூப்பை பயன்படுத்துகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விளம்பரங்களின் சங்கமமாக யூடியூப் மாறியதால், பவுடர், சாம்பு முதல் ஆன்லைன் கேம் வரையிலான விளம்பரங்களும், அரசியல் கட்சியினரின் விளம்பரங்களும் இடம்பெற்றது. மேலும், புகையிலை, மது வகைகள், மாத்திரைகள் விளம்பரங்களும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற விளம்பரங்களை முகப்பு பக்கத்தில் இடம்பெறாது என யூடியூப் நிறுவனம் யூசர்களுக்கு இமெயில் மூலம் தெரிவித்துள்ளது. முகப்பு பக்கத்தில் முழு பக்கம் விளம்பரம்படுத்துவதை கடந்த ஆண்டு யூடியூப் நிறுவனம் ரத்து செய்திருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்பின் விளம்பரங்கள் அதிகளவு யூடியூப் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றது அரசியல் ரீதியாக சர்ச்சையாக உருவெடுத்தது.

இதனையடுத்து முதல் பக்கத்தில் முழுப்பக்க விளம்பரத்தை அந்நிறுவனம் ரத்து செய்தது. தற்போது யூ டியூப் முகப்பு பக்கத்தில் மேல் பகுதியில் இடம்பெறும் விளம்பரங்களிலும் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. அரசியல் விளம்பரங்கள் சார்பு நிலையை ஏற்படுத்துவதாலும், மது மற்றும் புகையிலை விளம்பரங்கள் யூசர்களை தவறான பாதைக்கு வழி நடத்த வழிவகுக்கும் என்பதாலும் இந்த முடிவை யூ டியூப் நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மருந்து கம்பெனிகள், யூடியூப் தளத்தைப் பயன்படுத்தி மருந்துகளை பரிந்துரை செய்யும் விளம்பரங்களை அதிகளவு வெளியிட்டு வருகின்றன. இது மக்களை தவறாகவும், மனக் குழப்பத்துக்கும் வழிநடத்திச் செல்லும் என்பதால் இந்த விளம்பரங்களும் இடம்பெறாது என யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது.

Also read... Jio Recharge Plan: ஜியோ ரீசார்ஜ் பிளான் அப்டேட்.. இனி தினம் டேட்டாவை எவ்வளவு வேணும்னாலும் பயன்படுத்தலாம்

இது தொடர்பாக யூடியூப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், யூசர்களின் மெயில்களுக்கு அனுப்பியுள்ள தகவலில், யூசர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் என இருவரின் நலனையும் கருத்தில் கொண்டு விளம்பரம் தொடர்பாக பல்வேறு வகைகளையும் மறு பரிசீலனை செய்தோம். இது வழக்கமான நடைமுறை. ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் பக்க விளம்பரத்தை ரத்து செய்திருந்தோம். அதன்தொடர்ச்சியாக முதல் பக்கத்தில் இனி வரும் காலங்களில் புகையிலை, மது வகைகள் மற்றும் அரசியல் விளம்பரங்கள், மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பது போன்ற விளம்பரங்கள் இடம்பெறாது எனக் கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: