முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / பழைய செல்போனை செலவின்றி CCTV கேமராவா மாற்றலாம்.. எப்படி தெரியுமா..?

பழைய செல்போனை செலவின்றி CCTV கேமராவா மாற்றலாம்.. எப்படி தெரியுமா..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நீங்கள் வேண்டாம் என ஒதுக்கிய பழைய செல்போனை குறைந்த விலைக்கு விற்கவோ, மேசை டிராயருக்குள் போடவோ வேண்டாம்… அதை நம் வீட்டைக் கண்காணிக்கும் கேமராவாக மாற்றலாம். எப்படி எனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்தப் பதிவைப் படியுங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேமரா வசதியுடன் ஆண்ட்ராய்டு அல்லது iOS தளத்தில் இயங்கும் எந்தவொரு பழைய போன் இருந்தாலும் இது சாத்தியமே. இதில் சிறப்பு என்னவென்றால், இதற்காக நீங்கள் பணம் செலவிட வேண்டியதில்லை. பொதுவாக, ஒரு வீட்டிற்கு CCTV கேமரா அமைப்பை நிறுவ வேண்டும் என்றால், குறைந்தது மூன்றாயிரம் ரூபாய் முதல் 25ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

ஆனால், இத்தகைய செலவை எல்லோராலும் செய்ய முடியாது. ஆனால், இந்த செலவை யோசித்து வீட்டின் பாதுகாப்பையும் நாம் அலட்சியப்படுத்த முடியாது. இத்தகைய சூழ்நிலையைக் கையாள ஏதுவான வழி தான் உங்கள் பழைய மொபைல் சாதனத்தை CCTV ஆக மாற்றம் சூப்பர் டிப்ஸ்.

Read More : பணம் பெற QR Code ஸ்கேன் பண்ணிடாதீங்க... மொத்தமா போயிடும்.. UPI கவனம்!

இதைச் செய்வதற்கு உங்களுக்கு மிஞ்சிப்போனால், வெறும் 5 நிமிடங்கள் கூட ஆகாது. Google Play Store மற்றும் Apple Apps Store இல் கிடைக்கும் சில இலவச ஆப்ஸ் உதவியுடன், யாருடைய உதவியும் இல்லாமல் இதை நீங்கள் செய்து முடிக்கலாம்.

பழைய செல்போனை சிசிடிவி கேமராக மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ..

முதலில் உங்களிடம் இருக்கும் பழைய செல்போன் எந்த இயங்குதளத்தில் இயங்குகிறது என்று கவனிக்கவும்.அது ஆண்ட்ராய்டு சாதனமா? அல்ல ஐபோன் சாதனமா? என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
Android சாதனம் என்றால், Google Play Store சென்று IP Webcam ஆப்ஸை டவுன்லோட் செய்யுங்கள்.
iPhone பயனர்கள் ஆப்ஸ் ஸ்டோர் சென்று இந்த ஆப்ஸை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த ஆப்ஸை உங்கள் பழைய போனிலும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.பின் ஆப்பை திறந்து, கீழே உள்ள ஸ்டார்ட் சர்வர் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
பிறகு, செயலி கேட்கும் சில அனுமதிகளை நீங்கள் OK செய்து அனுமதி வழங்க வேண்டும். இப்போது உங்கள் பழைய போனின் கேமரா இயங்கப்படும்.
கேமரா இயக்கப்பட்ட உடன் உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன் அடிப்பகுதியில் ஒரு ஐபி முகவரி தோன்றும். அந்த IP முகவரியை நோட் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனின் பிரவுசர் லிங்க் முகவரியில் IP அட்ரஸை டைப் செய்ய வேண்டும்.இறுதியாக IP Webcam வெப்சைட்டில் உங்கள் கேமரா திறந்துவிடும்.
இதன் மூலம் உங்கள் பழைய மொபைல் கேமரா மூலம் உங்கள் வீட்டை நீங்கள் கண்காணிக்க முடியும். உங்கள் பழைய போனை சிசிடிவி கேமராவாக பயன்படுத்த, அதில் கேமரா சரியாக செயல்படுவதை உறதி செய்து கொள்ளுங்கள்.
சிசிடிவி கேமராவாக செயல்படும் பழைய போனை அடிக்கடி சார்ஜ் செய்து வைப்பது போன்ற வேலைகளை தவறாமல் செய்வதும் முக்கியம்.செய்தியாளர் : ரொசாரியோ ராய்
First published:

Tags: CCTV, CCTV Footage, Technology