பேடிஎம், அமேசான் பே, ஃபோன் பே பயன்படுத்துகிறீர்களா? KYC நிரப்ப கால அவகாசம் நீட்டிப்பு!

பணப் பரிவர்த்தனையை குறைத்து ஆன்லைன் பேமன்ட் முறைகளை ஊக்குவிக்க அரசும் முயற்சித்து வருகிறது.

Web Desk | news18
Updated: September 2, 2019, 4:23 PM IST
பேடிஎம், அமேசான் பே, ஃபோன் பே பயன்படுத்துகிறீர்களா? KYC நிரப்ப கால அவகாசம் நீட்டிப்பு!
மொபைல் வாலெட்
Web Desk | news18
Updated: September 2, 2019, 4:23 PM IST
பேடிஎம், அமேசான் பே, ஃபோன் பே போன்ற மொபைல் பேமன்ட் முறைகளைப் பின்பற்றுவோருக்கான KYC விவரங்களை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மொபைல் வாலெட் பயன்படுத்துவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மொபைல் வாலெட் (Paytm, Amazon Pay மற்றும் PhonePe) வைத்திருப்போர் கட்டாயம் KYC படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த உத்தரவு கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கியால் விதிக்கப்பட்டது.

வருகிற 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் KYC விவரங்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் பேமன்ட் செயல்பாடுகள் தடை செய்யப்படும். இந்த விதிமுறையை மொபைல் பேமன்ட் நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.


பணப் பரிவர்த்தனையை குறைத்து ஆன்லைன் பேமன்ட் முறைகளை ஊக்குவிக்க அரசும் முயற்சித்து வருகிறது. இந்த ஆன்லைன் தளங்களை முறைப்படுத்து அரசு சில விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் செயல்படுத்த முயற்சித்து வருகிறது. வாடிக்கையாளர் நிரப்பும் KYC ஒவ்வொரு ஆண்டும் புதிப்பிக்கப்பட வேண்டும் என்றும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ₹ 11 ஆயிரம் விலை தள்ளுபடி விற்பனையில் நோக்கியா 8.1..!
First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...