ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

YouTube வீடியோக்களை Dislike கொடுக்கும் முன்பாக இதை தெரிஞ்சுக்கோங்க!

YouTube வீடியோக்களை Dislike கொடுக்கும் முன்பாக இதை தெரிஞ்சுக்கோங்க!

யூடியூப்

யூடியூப்

மொசில்லா பிரவுஸர் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  மகா கடலில் வலை வீசினால் மீன் மட்டுமே தான் மாட்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. சின்ன, சின்ன பூச்சிகள், ஆமைகள், கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என பலவும் வந்து சேரும். அதில் நமக்கு தேவையான மீன்களை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்.

  இந்த எடுத்துக்காட்டு எதற்காக என்றால், யூ-டியூப் வலைதளமும் அப்படித்தான். நாம் பயன்பெறத் தகுந்த, ஆக்கப்பூர்வமான பல அறிய தகவல்கள் யூ-டியூப் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதுனூடாக பல குப்பைகளும் சேர்ந்தே கிடக்கின்றன.

  மருத்துவக் குறிப்புகள், பள்ளி, கல்லூரிகளுக்கான பாடக் குறிப்புகள், பொது வழிகாட்டுதல்கள், நிறைய ப்ராடக்ட் குறித்த ரிவியூ வீடியோக்கள் என பெரும் களஞ்சியமே யூ-டியூப் தளத்தில் நிறைந்து கிடக்கின்றன.

  இவ்வளவு ஏன்? பொழுதுபோக்கு அம்சமாக நீங்கள் சில பாடல்கள், காமெடி வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கையில் கூட, நாம் விரும்பாத ஆபாச வீடியோக்களும் கூட பரிந்துரைப் பட்டியலில் காட்டிக் கொண்டே இருக்கும். சாதாரண சமையல் வீடியோ பார்க்கச் சென்றால் கூட, நம் கவனத்தை வேறுபக்கம் திசை திருப்பும் வகையிலான வீடியோக்கள் கண் முன்னே வந்து கொண்டே இருக்கும்.

  இதுபோன்று நாம் விரும்பாத வீடியோக்கள் பரிந்துரையில் வரும்போது என்ன செய்வோம்? உடனடியாக அதை டிஸ்லைக் செய்து விடுவோம். டிஸ்லைக் செய்வதால் இனி அதுபோன்ற வீடியோக்கள் நமக்கான பரிந்துரை பட்டியலில் வராது என்றுதான் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

  டிஸ்லைக் செய்வதால் பலனில்லை

  நீங்கள் என்ன தான் மாய்ந்து, மாய்ந்து டிஸ்லைக் செய்தாலும் தேவையற்ற வீடியோ பரிந்துரை என்பது 12 சதவீதம் மட்டுமே குறைகிறதாம். அப்படியானால், நீங்கள் விரும்பாத வீடியோக்கள் எப்போதும் போல வந்து கொண்டே தான் இருக்கும் என்று அர்த்தம்.

  மொசில்லா பிரவுஸர் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. சுமார் 22 ஆயிரம் பயனாளர்களுக்கான யூ-டியூப் வீடியோ பரிந்துரை பட்டியலைக் கொண்டு இந்த நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜூன் வரையிலும் இந்த ஆய்வு நடைபெற்றது.

  ஆய்வில் பங்கேற்ற பயனாளர்கள், சுமார் 5.67 கோடி வீடியோ பரிந்துரைகளை மொசில்லா நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டனர். அதை வைத்து பார்க்கும்போது நாம் டிஸ்லைக் செய்யும் வீடியோ வகைகளை யூ-டியூப் வலைதளம் பெரும்பாலும் வடிகட்டுவதே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

  அதே சமயம், வாட்ச் ஹிஸ்டரி பக்கத்தில் இருந்து அதே வீடியோவை நீங்கள் ரிமூவ் செய்யும் பட்சத்தில், உங்களுக்கான பரிந்துரைகள் 29 சதவீதம் வரையில் குறைகிறது. Don't Recommend Channel என்ற ஆப்சனை நீங்கள் பயன்படுத்தினால் மட்டுமே 43 சதவீதம் அளவுக்கு தேவையற்ற வீடியோக்களின் பரிந்துரைகள் குறைகிறதாம்.

  Read More; விண்ணில் பாய உள்ள சென்னை ஐஐடியின் அக்னி பான் ராக்கெட்..!

  தேவையற்ற வீடியோக்களை தவிர்க்க தனிநபர்கள் சில பிரத்யேக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். Incognito mode, VPN, Cookies Delete போன்ற நடைமுறைகளை அவர்கள் கையாளுகின்றனர். ஆய்வின் இறுதியாக, தேவையற்ற வடிகட்டும் கட்டமைப்புகள் பல யூ-டியூப் தளத்தில் செயல்படுவதே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Smartphone, Youtube, Youtube viewers