திருடு போன செல்போனை ஆப் மூலம் கண்டுபிடித்து அசத்திய சென்னை இளைஞர்!

Web Desk | news18-tamil
Updated: September 4, 2019, 9:33 PM IST
திருடு போன செல்போனை ஆப் மூலம் கண்டுபிடித்து அசத்திய சென்னை இளைஞர்!
மாதிரி படம்
Web Desk | news18-tamil
Updated: September 4, 2019, 9:33 PM IST
சென்னையில் திருடுபோன செல்போனை FIND DEVICE APP மூலம் தானே கண்டுபிடித்து, 2 திருடர்களை போலீசில் பிடித்துக்கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார் இளைஞர் ஒருவர். 

சென்னை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் 24 வயதான வெங்கட் தனியார் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து 2 செல்போன்கள் திருடு போனது. இது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் வெங்கட் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் வெங்கட் திருடு போன தனது செல்போனில், போன் ட்ராக்கர் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதனுடன் தனது மின் அஞ்சல் முகவரியை இணைத்து வைத்திருந்தார்.  திருடப்பட்ட வெங்கட்டின் 2 செல்போனில் ஒரு போன் இரண்டு நாட்களுக்குப்பிறகு ஆன் ஆனது.


அப்போது பைன்ட் டிவைஸ் ஆப் மூலம் அவரது மொபைல் இருக்கும் இடம் குறித்த அலர்ட் மெசேஜ் வெங்கட்டின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்தது. செல்போன் வானகரம் லொகேஷனை காட்டியது.

இதை அடுத்து வெங்கட் அங்கு சென்று பார்த்த போது 22 வயது மணிகண்டன் என்ற இளைஞரிடம் திருடப்பட்ட இரண்டு செல்போன்களும் இருப்பது தெரிய வந்தது. அங்கிருந்தே மதுரவாயல் போலீசாருக்கு வெங்கட் தகவல் கொடுத்து வர வைத்தார். அங்கு வந்த போலீசாரிடம் மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளியை சாமர்த்தியமாக போலீசில் பிடித்துக் கொடுத்தார். 2 செல்போன்களையும் மீட்ட அவர், இது போன்ற செல் போன் டிராக்கர் ஆப் மூலம் திருடு போன செல்போனை கண்டுபிடிப்பது எளிது எனக் கூறினார்.

இளைஞரின் செயலை பாராட்டியுள்ள போலீசார், ஸமார்ட் போன்களை முடிந்தவரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். மீறி திருடு போகும் பட்சத்தில், இதுபோன்ற பைன்ட் டிவைஸ் ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால், திருடர்கள் போனை ஆன் செய்யும்போது கண்டுபிடிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

Loading...

Also Watch 

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...