களை எடுக்க... நாற்று நட... விவசாயத்தைக் காக்க ரோபோ கண்டுபிடித்த இந்திய மாணவர்

கடல் நீரை மாசுபடுத்தும் குப்பைகளை நீக்கவும் ரோபோ

news18
Updated: April 15, 2019, 11:30 PM IST
களை எடுக்க... நாற்று நட... விவசாயத்தைக் காக்க ரோபோ கண்டுபிடித்த இந்திய மாணவர்
சாய்னாத் மணிகண்டன்
news18
Updated: April 15, 2019, 11:30 PM IST
அரபு நாட்டில் படித்து வரும் இந்திய மாணவர் விவசாயத்தைக் காக்கவும், கடல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் இரண்டு ரோபோவை உருவாக்கியுள்ளார். 

சாய்நாத் மணிகண்டன் எனும் 16 வயது மாணவர் அரபு நாட்டில் வசித்து வரும் இந்திய மாணவர். இவர் கால நிலை மாற்றம் என்னும் தலைப்பில் கடல் சார் வாழ்வாதாரத்தைக் காக்கவும், விவசாயத்தைக் காக்கவும் M Bot மற்றும் Agri Bot  என இரண்டு ரோபோவைக் கண்டு பிடித்துள்ளார்.
இந்த M Bot, கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், கடல் நீரை மாசுபடுத்தும் குப்பைகளை நீக்க உதவுகிறது. இது குறித்து சாய்னாத் கலீஜ் டைம்ஸ் என்னும் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "இந்த ரோபோ கடல் மேல் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க உதவும். இது பார்ப்பதற்கு boat வடிவில் இருக்கும். அதில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் தண்ணீரில் boat போல் மிதந்து செல்ல உதவும்.பின் அதிலிருக்கும் ஸ்டிக் ஒவ்வொரு கழிவுகளையும் எடுத்து அதில் பொருத்தப்பட்டுள்ள குப்பை டப்பாவில் வீசும்" என அதன் பயன்பாடு குறித்து விளக்கியுள்ளார். 

அடுத்ததாக Agri Bot விவசாயிகளில் வேலையைக் குறைக்கக் கூடியதாக உதவுகிறது. களை எடுத்தல்,விதைகளை நடுதல், நாற்று நடுதல், விதைகள் நட்ட பின் மண் தூவி புதைத்தல் என விவசாயிகளுக்கு உதவும் விதமாக இந்த ரோபோட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது வெயில் கடுமையாக இருக்கும் அரபு போன்ற நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் என சாய்னாத் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : அதிக நேரம் கணினியில் அமர்வதால் கழுத்து வலிக்கிறதா? தவிர்க்க சில தகவல்கள்..!

Loading...


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...