• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • கோவிட் -19: தடுப்பூசி சான்றிதழை சமூக ஊடகங்களில் ஷேர் செய்ய வேண்டாம் என அரசு எச்சரிப்பது ஏன்?

கோவிட் -19: தடுப்பூசி சான்றிதழை சமூக ஊடகங்களில் ஷேர் செய்ய வேண்டாம் என அரசு எச்சரிப்பது ஏன்?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவிட்டுக்கு எதிராக இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு கொண்டுள்ளவர்கள் அல்லது முதல் டோஸ் மட்டுமே பெற்றவர்கள், தடுப்பூசி சான்றிதழ் பொதுவில் வெளியிடக் கூடாத சில முக்கியமான தரவுகளை கொண்டுள்ளது என்று கருதாமல் பொறுப்பின்றி சமூக ஊடகங்களில் தங்கள் சான்றிதழ்களை வெளியிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தற்காத்து கொள்ள மக்கள் தடுப்பூசி போடு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற நெருக்கடி காலத்தில் ஒரு நபர் பொறுப்புடன் சென்று கோவிட்-19 தடுப்பூசி போட்டு கொள்வது ஒரு மகிழ்ச்சியான செயல். ஆனால் அதே நேரத்தில் COVID-19 தடுப்பூசி சான்றிதழை சிலர் தங்களது சமூக ஊடகங்களில் ஷேர் செய்வது ஒரு மோசமான நடவடிக்கையாகும். கோவிட்டுக்கு எதிராக இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு கொண்டுள்ளவர்கள் அல்லது முதல் டோஸ் மட்டுமே பெற்றவர்கள், தடுப்பூசி சான்றிதழ் பொதுவில் வெளியிடக் கூடாத சில முக்கியமான தரவுகளை கொண்டுள்ளது என்று கருதாமல் பொறுப்பின்றி சமூக ஊடகங்களில் தங்கள் சான்றிதழ்களை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே தடுப்பூசி பெற்றவர்கள் அதற்கான சான்றிதழ்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதற்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான சைபர் டோஸ்ட் (Cyber Dost)-ன் ட்விட்டர் அக்கவுண்ட்டில் உள்துறை அமைச்சகம் சில ஆலோசனை மற்றும் அறிவுறுதல்களை வழங்கி உள்ளது.

தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைப்படி ஒருவர் தனது முதல் டோஸ் COVID-19 தடுப்பூசியைப் பெறும் போது, அவர் எந்த நிறுவனத்தின் தடுப்பூசி போட்டு கொண்டாரோ அந்த தடுப்பூசியின் பெயரை குறிப்பிடும் ஒரு சான்றிதழ் அரசு சார்பாக தரப்படுகிறது. மேலும் அதில் அந்த நபர் தடுப்பூசி போட்டு கொண்ட நேரம் மற்றும் தேதி குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த சான்றிதழ் தடுப்பூசி மையத்தின் பெயர், தடுப்பூசி எடுத்து கொள்பவருடைய ஆதார் அட்டையின் கடைசி 4 இலக்கங்களையும் கொண்டுள்ளது. தவிர இந்த சான்றிதழ் குறிப்பிட்ட நபர் எப்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற வேண்டும் என்ற தேதியையும் குறிப்பிடுகிறது.

ஒருவர் தனது முதல் டோஸ் தடுப்பூசிக்கு பிறகு பெறும் சான்றிதழ் ஒரு தற்காலிக சான்றிதழ் மட்டுமே. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவுடன் மட்டுமே இறுதி சான்றிதழ் வழங்கப்படும். இதனிடையே Cyber Dost ட்விட்டர் அக்கவுண்ட்டில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "தடுப்பூசி சான்றிதழில் உங்கள் பெயர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் இருப்பதால் சமூக ஊடகங்களில் நீங்கள் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழை ஷேர் செய்யும் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ட்வீட்டில், "உங்கள் தனிப்பட்ட விவரங்களுடன் இருக்க கூடிய தடுப்பூசி சான்றிதழை சமூக ஊடகங்களில் ஷேர் செய்வதால், அதன் மூலம் உங்களிடம் மோசடி செயலில் ஈடுபட சைபர் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீங்களே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து விடுகிறீர்கள்.

Also read... தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஷெரீன் - என்ன ஆச்சு தெரியுமா?

எனவே மோசடிகளில் இருந்து தப்பிக்க உங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை சமூக ஊடகங்களில் ஷேர் செய்வதை தவிர்த்து விடுங்கள்" என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு இந்த எச்சரிக்கையை விடுக்க மற்றொரு முக்கிய காரணம், இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்த பின் எதிர்காலத்தில் ஒரு தடுப்பூசி சான்றிதழ் உங்கள் ஆதார் அட்டையைப் போலவே முக்கியமான ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மற்ற நாடுகள் அல்லது நகரங்களுக்கு பயணம் செய்யும் போது இதை பயன்படுத்தும் நிலை உருவாகும். எனவே தடுப்பூசி பூட்டு கொண்ட பின்னர் அதற்காக வழங்கப்படும் சான்றிதழ்களை சமூக ஊடகங்களில் ஷேர் செய்வதை தவிர்ப்போம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: