முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / அதிகரித்து வரும் ஆன்லைன் வங்கி மோசடிகள்: பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அதிகரித்து வரும் ஆன்லைன் வங்கி மோசடிகள்: பாதுகாப்பாக இருப்பது எப்படி?

ஆன்லைன் வங்கி மோசடி

ஆன்லைன் வங்கி மோசடி

Online Banking Frauds : பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய வங்கிகள் தங்களது சமூக கணக்குகளை பயன்படுத்துகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டிஜிட்டல் மற்றும் இணைய வழி பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவது போலவே, சைபர் குற்றவாளிகள் என்று கூறப்படும் ஆன்லைனில் மோசடி, ஹேக்கிங் மற்றும் திருட்டு ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களும் அதிகரித்துள்ளனர். வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளை பலருக்கு உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுபவர்கள், ஆன்லைன் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்கள், பேமெண்ட் போர்ட்டல்கள் மற்றும் பிற வங்கி பேமெண்ட் நெட்வொர்க்கை ஹேக் செய்கிறார்கள்.

2021 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட தனது ஆண்டறிக்கையில், “பாதுகாப்பான டிஜிட்டல் பேங்கிங் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய வங்கிகள் தங்களது சமூக கணக்குகளை பயன்படுத்துகின்றன. ஊரடங்கு காலத்தின் போது ஃபிஷிங், நிதி மோசடிகள் மற்றும் பிற சைபர் கிரைம்களில் ஈடுபட்டுள்ள சில மோசடி நிறுவனங்களின் செயல்களை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைத்தனர்.

2020-21 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட ரூ. 1.38 டிரில்லியன் தொகைக்கு பண மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது, கடந்த ஆண்டு நடைபெற்ற மோசடியான ரூ.1.85 டிரில்லியனில் இருந்து கணிசமான தொகைக் குறைந்துள்ளது. ஆனால், தற்போதைய நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.36,342 கோடிக்கு ஆன்லைன் வங்கி மோசடி நடந்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள் :  பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கப்போகும் சர்வதேச விண்வெளி நிலையம்; எப்போது?

 ஆன்லைன் வங்கி மோசடிகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக, இணைய பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் பின்வரும் வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

எப்படி ஆன்லைன் வங்கி மோசடிகளைத் தடுப்பது?

முதலில், ஆன்லைன் வங்கி மோசடியால் பாதிக்கப்படுவது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் தனிநபர்கள் மட்டுமல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.பல ஹேக்கர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களை குறி வைக்கிறார்கள். போலி மின்னஞ்சல்கள் மூலம், வணிகங்களும் ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

இதையும் படியுங்கள் :  பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கப்போகும் சர்வதேச விண்வெளி நிலையம்; எப்போது?

வங்கிக்கணக்கின் தனிப்பட்ட விவரங்களான யூசர் ஐடி, லாகின் ID அல்லது பாஸ்வேர்டு, டிரான்சாக்ஷன் பாஸ்வேர்டு, OTP, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விவரங்களான PIN, CVV, டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இந்த விவரங்களை யாருடனும் எந்த சூழலிலும் பகிரக்கூடாது.

அடுத்ததாக, KYC ஐ புதுப்பிக்க வேண்டும் என்ற போலியான அழைப்புகளைத் தவிர்க்க வேண்டும். மோசடியாளர்கள் மற்றும் ஹேக்கர்கள் உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல், அடையாள சான்றுகள், வசிப்பிட முகவரி உள்ளிட்ட தகவலைப் பெற, மொபைல் அழைப்பு அல்லது மின்னஞ்சல் வழியே KYC அப்டேட் செய்ய வேண்டும் என்று உங்களுடன் தொடர்பு கொள்வார்கள். எனவே, இது மாதிரியான அழைப்புகளை எப்போதும் நிராகரித்து விடுங்கள்.

இதையும் படியுங்கள் : விமானங்களில் விரைவில் குழந்தைகளுக்கான பிரத்யேக சீட் வசதி!

 வங்கியின் அதிகாரபூர்வமான வலைத்தளம் மற்றும் செயலி உள்ளன. அதே போல, பல்வேறு பேமெண்ட் நெட்வொர்க்கும் அதற்குரிய செயலிகளைக் கொண்டுள்ளன. அவற்றைத் தவிர்த்து, வேறு எந்த செயலி அல்லது லிங்க்கைப் பயன்படுத்த வேண்டாம்.

பண பரிவர்த்தனைகளுக்கு, குறிப்பிட்ட வரம்பை அமைக்கலாம். அந்தத் தொகைக்கும் அதிகமாக பணத்தை எடுக்கவோ அல்லது டிரான்ஸ்ஃபர் செய்யவோ கூடாது என்பதை நீங்கள் செயல்படுத்தலாம்.

மின்னஞ்சல் வழியாகவும், செயலியிலும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் உங்கள் கணக்கு அல்லது வாலெட்டின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் நோட்டிஃபிகேஷன் வருமாறு அமைத்துக் கொள்ளுங்கள்.

First published:

Tags: Banking, Online crime