இணையதள சேவை வேகம் மிகவும் குறைவாக உள்ள பகுதியில் நீங்கள் இருக்கும் போது அவசரமாக பணம் அனுப்ப வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்.?
அது போன்ற சூழலில் உங்கள் வங்கி கணக்கில், மொபைல் வங்கி சேவைக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தால் இணைய இணைப்பு இல்லாமல், ஃபீயூச்சர் போனிலும் *99# என்ற எண்ணை டயல் செய்து பணம் அனுப்பலாம்.
தேசிய கொடுப்பனுவுகள் கார்ப்ரேஷன் நிறுவனம் இணைய சேவை இல்லாத மொபைல் போனிலிருந்தும் பிற வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்புவதற்காக அறிமுகம் செய்யப்பட்டது தான் ஒருங்கிணைந்த யு.எஸ்.எஸ்.டி (USSD)சேவை.
இணைய வசதி இல்லாத உங்கள் போன் அல்லது பியூச்சர் போனிலிருந்து *99# என்ற எண்ணை டயல் செய்யும் போது UPI ID, IFSC மற்றும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும் சேவையை பெற முடியும்.
இந்த சேவையில் 5,000 ரூபாய்க்கும் அதிகமாக பணம் பரிவர்த்தனை செய்ய முடியாது என்ற கட்டுப்பாட்டை ஆர்பிஐ விதித்துள்ளது. *99# எண்ணை டயல் செய்யும் போது மொபைல் நெட்வொர்க்கை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும்.
உங்கள் போனில் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்தும் போது அது தொலைந்து போனாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. யூபிஐ பின் எண் இல்லாமல் பணம் பரிவர்த்தனை செய்ய முடியாது. ஆனாலும் மொபைல் போன் தொலைந்த உடன் உங்கள் வங்கிக்கு அது குறித்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வது நல்லது.
மேலும் இந்த சேவையை பயன்படுத்தி, ஒரு முறை பணம் அனுப்பிவிட்டால் அதை இடையில் நிறுத்தவோ, திரும்பப் பெறவோ முடியாது. ஆனால் சேவையில் ஏதேனும் குறைகள், தடங்கல்கள் இருந்தால் வங்கியை தொடர்புகொண்டு சிக்கலுக்கு தீர்வு காண முடியும்.
மேலும் பார்க்க:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.