Home /News /technology /

இன்ஸ்டாகிராமில் பிரபலமா நீங்கள்...? உங்களுக்காகவே புதிய அப்டேட் அறிவித்த மெட்டா

இன்ஸ்டாகிராமில் பிரபலமா நீங்கள்...? உங்களுக்காகவே புதிய அப்டேட் அறிவித்த மெட்டா

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

பிரபலங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு அம்சத்தைத் தான் இப்பொழுது இன்ஸ்டாகிராம் சோதனை செய்து வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    இனி வரப்போகும் புதிய அப்டேட்டில் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர்ஸ் எனப்படும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு அவர்களுடைய ரசிகர்கள் அன்பளிப்புகளை அனுப்பும் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது இன்ஸ்டாகிராம்.

    மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு சமூக வலைத்தளமாகும். மெட்டா நிறுவனத்தின் முக்கிய படைப்பான ஃபேஸ்புக்கை மிஞ்சும் அளவிற்கு தற்போது இன்ஸ்டாகிராம் யூசர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது.

    இதன் எளிய வடிவமைப்பும், இதனுடைய பாதுகாப்பு அம்சங்களும் அனைவரையும் அதிக அளவில் ஈர்த்துள்ளது. மேலும் பலர் தங்களை பிரபலமாக்கிக் கொள்ளவும் தங்கள் நிறுவனம் அல்லது தாங்கள் உருவாக்கிய பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இன்ஸ்டாகிராமில் ப்ரொமோட் செய்வது மிக எளிதாக உள்ளது.

    பலர் இதனை பயன்படுத்துவதால் மிக எளிதில் மக்களிடம் தங்களுடைய பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கு உதவியாக உள்ளது. இந்த வசதியினால் பலரும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி இப்பொழுது தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

    இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுவென்சஸ் என அழைக்கப்படும் இவர்கள் அவ்வப்போது லைவில் வைத்து தன்னுடைய ரசிகர்களுக்கு “சர்ப்ரைஸ்” கொடுப்பது அவர்களுடன் கலந்துரையாடுவது மேலும் சில கம்பெனிகளுடன் பார்ட்னர்ஷிப் வைத்துக் கொண்டு அவர்களுடைய ப்ராடக்டுகளை தங்கள் ரசிகர்களிடம் ப்ரொமோட் செய்வது போன்ற வேலைகளையும் செய்து வருகின்றனர்.

    இது போன்ற இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு அம்சத்தைத் தான் இப்பொழுது இன்ஸ்டாகிராம் சோதனை செய்து வருகிறது. “அல்லேசான்றோ பல்லூசி” என்ற செயலிகளை பற்றி ஆராயும் ஒருவரால் முதன் முதலில் ஜூலையில் இந்த வசதியை பற்றிய செய்தி வெளியிடப்பட்டது. “கன்டென்ட் அப்ரிவேஷன்” என்ற பெயரில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர் வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட்டில் இருந்து சில விஷயங்கள் நம்மால் யூகிக்க முடிகிறது. அதன்படி இந்த இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வரப்போகும் புதிய அப்டேட்டில், தனது ப்ரொபைலில் ஒரு “டாகிள்” பட்டனை ஆன் செய்து வைத்துக் கொள்வதின் மூலம் தங்களுடைய ரசிகர்கள் தங்களுக்கு பரிசு அல்லது பணம் அனுப்புவதற்கு வழி செய்து கொள்ளலாம்.அவ்வாறு அவர்கள் அனுப்பும்போது அவர்களுக்கு என ஒரு தனிப்பட்ட “பேட்ச்” அல்லது அடையாளம் போன்றவை கொடுக்கப்படும் என்பது போல தெரிகிறது.

    கிட்டத்தட்ட யூடியூப்-லும் இதே போன்ற ஒரு வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. சூப்பர் சாட் எனப்படும் இந்த வசதியில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த யுடியூபர்களுடன் அவர்கள் லைவில் வரும்போது அவர்களுடன் சாட் செய்வதற்காக பணம் கட்டி சாட் செய்யலாம். அப்போது அவர்களுடைய பெயர் அந்த யூடியூபருக்கு முதலில் தெரியும். மேலும் தங்களுக்கு பிடித்த பிரபலத்துடன் இதனால் நெருக்கமாக வாய்ப்புகளும் அதிகரிக்கிறது என்று நம்புகின்றனர்.

    Read More: ”மக்களே உஷார் நெட் பேங்கிங் மூலம் புது வைரஸ் உங்கள் பணத்தை திருடிவிடும்”: தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    இன்ஸ்டாகிராம் 2020 ஆம் ஆண்டிலேயே இது போன்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தியது. அதன்படி இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் லைவில் வரும்போது அதில் கீழே அவர்களுடைய ரசிகர்கள் குறிப்பிட்ட தொகையில் உள்ள பேட்சுகளை வாங்கிக் கொள்ள முடியும். அவ்வாறு வாங்கும் போது ஒரு ஹார்ட் சிம்பல் ஆனது அவர்களின் பெயருக்கு மேலே தோன்றி அவர்களை பற்றியத் தகவலை அந்த இன்ஸ்டாகிராம் பிரபலத்திற்கு காண்பிக்கும்.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Instagram

    அடுத்த செய்தி