பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், உலகின் முதல் மெட்டாவேர்ஸ் நட்பு விமான நிலையமாக மாறத் தயாராக உள்ளதாக BIAL ( பெங்களூரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட்) அறிவித்தது.
பெங்களூரு விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் மெட்டாவேர்ஸ் சேவையானது தொடங்கப்பட உள்ளது. இதற்காக விமான நிலைய நிர்வாகம் Amazon Web Services (AWS) மற்றும் Polygon ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கட்டமைத்துள்ளது. அதனால் இந்த முனைய சேவைக்கு 'BLR Metaport' என்று பெயர் வந்துள்ளது
BLR விமான நிலையத்தில் இரண்டாம் முனையத்தில் 'BLR Metaport'அதன் பார்வையாளர்களுக்கு விமானநிலையத்தில் முப்பரிமாண (3D) மெய்நிகர் அனுபவத்தை வழங்கும். மெட்டாவேர்ஸ் அனுபவம் பெற ஆர்வமுள்ளவர்கள், www.Blrmetaport.Com இல் உள்நுழைந்து , அவர்களின் ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்தி, புதிய அதிநவீன டெர்மினலைச் சுற்றிப் பார்க்க முடியும்.
இதையும் படிங்க: உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி.. வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்குமாம்..!
BIAL அறிக்கைப்படி , 3D இடைமுகம் வாடிக்கையாளர்களுக்கு விமான நிலையத்துடன் தொடர்புகொள்வதற்கான புதிய வழிகளை வழங்குகிறது. அதாவது டெர்மினல்களுக்குச் செல்வது, விமானங்களைச் சரிபார்ப்பது, ஷாப்பிங் செய்வது மற்றும் பிற பயணிகளுடன் இணைவது போன்ற சமூக அம்சங்கள் இதில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி மேலும் தெரிவிக்கையில், BIAL இன் தலைமை வியூகம் மற்றும் மேம்பாட்டு அதிகாரி சாத்யகி ரகுநாத், Web3 மற்றும் மெய்நிகர் டோக்கன் (NFTகள்) உலகில் இது தங்களின் முதல் பயணம் என்றும், பயணிகளுக்கு அதிவேகமான, தனித்துவமான அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
BLR Metaport என்பது பரவலாக்கத்தின் அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் கட்டுப்பாடு மற்றும் முடிவு ஒரு மையப்படுத்தப்பட்ட நிறுவனத்திலிருந்து விநியோகிக்கப்பட்ட நெட்வொர்க்கிற்கு மாற்றப்படும். சோதனை முயற்சியில் எல்லாம் சரியாக நடந்தால், BLR Metaport ஆனது எதிர்காலத்தில் தொலைதூரத்தில் வெவ்வேறு பிராண்டுகளிலிருந்து ஷாப்பிங் செய்ய பயனர்களுக்கு உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.