வாட்ஸ் அப்பில் இப்படியொரு அம்சம் இருக்கா? இனி யார் தொந்தரவும் இருக்காது

வாட்ஸ் அப்

பலவகையில் நமக்கு உபயோகமாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப் அம்சம் சில நேரங்களில் நமக்கு தொல்லை தரும் விஷயமாக மாறி விடுகிறது

 • Share this:
  வாட்ஸ்அப்பில் குரூப் அம்சம் என்பது குடும்பம், நண்பர்கள் அல்லது அலுவக சகாக்களுடன் ஒரே நேரத்தில் கூட இணைந்திருக்க ஒரு சிறந்த வழியாக நமக்கு பயன்பட்டு வருகிறது. நேரில் பேசி அரட்டை அடிக்க முடியாமல் இருக்கும் நண்பர்கள் கூட வாட்ஸ்அப் குரூப்பில் சேட் அல்லது வீடியோ கால் செய்து தங்களது நட்பை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். வீடியோ கால் அம்சம் இருந்தாலும் யூசர்கள் பெரும்பாலும் குரூப்பில் சேட் அல்லது வாய்ஸ் மெசேஜ் மூலம் அரட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  பலவகையில் நமக்கு உபயோகமாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப் அம்சம் சில நேரங்களில் நமக்கு தொல்லை தரும் விஷயமாக மாறி விடுகிறது. ஒரே நேரத்தில் பல வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பதால் நிரம்பி வழியும் மெசேஜ்களை படிக்க முடியாமல் பார்த்தாலே எரிச்சலடைவதில் இருந்து, பொருட்களை விற்க அல்லது தாங்கள் வழங்கும் சர்வீஸ்களை ப்ரமோட் செய்ய நம்மை தேவையற்ற குரூப்பில் யாரேனும் ஒருவர் சேர்ப்பது வரை பல சந்தர்ப்பங்கள் வாட்ஸ்அப் குரூப் நம்மை அசௌகரியப்படுத்தும் நிலையும் ஏற்படுகிறது.

  Also Read : அனுப்புற படத்தை பார்த்தா மட்டும் போதும்... வாட்ஸ் அப் புது அப்டேட்

  இது மாதிரியான குரூப்கள் பெரும்பாலும் யூஸர்கள் அனுமதியின்றி உருவாக்கப்பட்டு அதில் அவர்களை சேர்க்கப்பட்டு விடுகின்றனர். இது வாட்ஸ்அப் யூஸர்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கும். நம்மில் பலர் தேவையற்ற வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பதை வெறுக்கும் அதே நேரத்தில் அதிலிருந்து வெளியேற தயங்குவோம். இதற்கு சிறந்த வழி தேவையற்ற நபர்கள் உங்களை குரூப்பில் சேர்க்க முடியாத வஹ்யில் நிறுவனம் வழங்கி இருக்கும் பில்டர் அம்சத்தை பயன்படுத்துவது.

  உங்கள் வாட்ஸ்அப் அக்கவுன்ட்டின் பிரைவஸி செக்ஷனில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது தேவையற்ற குரூப்பில் உங்களை சேர்ப்பதை தடுக்க உதவுகிறது. உங்களை யாரெல்லாம் குரூப்பில் சேர்க்கலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க இந்த செட்டிங் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் செட்டிங்ஸை மாற்றிய பின்னரும், குரூப் அட்மின்கள் உங்களுக்கு இன்வைட் லிங்க்ஸை அனுப்பலாம் மற்றும் குரூப்களில் சேர உங்களைத் தூண்டலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  Also Read : வீடியோ காலில் 1000 பேர் வரை பங்கேற்கலாம் - டெலிகிராமில் அட்டகாசமான அப்டேட்!

  1. முதலில் வாட்ஸ்அப்பிற்கு சென்று வலதுபக்க மூலையில் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

  2. அடுத்து ஸ்க்ரீனில் பார்க்கும் settings-ஐ க்ளிக் செய்து பின்னர் Account என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

  3. இப்போது Privacy-ஐ க்ளிக் செய்து 6-ஆவதாக இருக்கும் Groups என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

  4. நீங்கள் இப்போது ஸ்கிரீனில் Everyone என்று டிஃபால்ட்டாக ஆப்ஷன் தேர்வு செய்யப்பட்டிருப்பதை பார்ப்பீர்கள். இது வழக்கம் போல எல்லோரையும் உங்களை வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்க அனுமதிக்கும் விருப்பமாகும்.

  5. அதற்கு கீழ் My Contacts மற்றும் My Contacts Except என்ற இரு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் My Contacts என்ற ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் மொபைல் கான்டாக்டில் இல்லாத நபர்கள் உங்களை குரூப்பில் சேர்ப்பதிலிருந்து தப்பிக்கலாம்.

  6. அடுத்ததாக இருக்கும் My Contacts Except என்ற ஆப்ஷனை செலக்ட் செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் மொபைல் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் நபர்களில், உங்களை யார் குரூப்களில் சேர்க்கலாம் என்பதை நீங்கள் தீர்மானித்து கொள்ளலாம். My Contacts Except-ஐ செலக்ட் செய்த பின், நீங்கள் தேர்வு செய்யும் நபர்கள் மட்டுமே உங்களை ஒரு குரூப்பில் சேர்க்க முடியும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: