ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்!

இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்!

 ஸ்மார்ட் ஃபோன்

ஸ்மார்ட் ஃபோன்

நீங்கள் விரைவில் புதிய ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல் இங்கே..

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இன்னும் சில நாட்களில் 2022-ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில் இந்த 2021-ல் Xiaomi, OnePlus, iQoo, Realme மற்றும் பல பிராண்டுகளில் பல குறிப்பிடத்தக்க ஸ்மார்ட் ஃபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை பார்த்தோம். இவற்றில் பெரும்பாலான ஃபோன்கள் 5G கனக்டிவிட்டியை சப்போர்ட் செய்வதாக இருக்கின்றன.

நீங்கள் விரைவில் புதிய ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல் இங்கே.. இந்த ஸ்மார்ட் ஃபோன்களில் சில ஆண்டு இறுதி விற்பனையின் அடிப்படையில் விலை குறைப்பைப் பெறலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி (Samsung Galaxy M52 5G):

Samsung Galaxy M52 5G Snapdragon 778 SoC ப்ராசஸரை கொண்டுள்ளது, இது ஒரு பிரபலமான மிட்-ரேஞ்ச் சிப்செட் ஆகும், இது மல்டி டாஸ்க்குகளை எளிதாகச் செய்ய கூடியது மற்றும் ஹெவி மொபைல் கேம்களை எளிதாக கையாள உதவும். இந்த ஃபோன் ஒரு பெரிய 6.67-இன்ச் ஃபுல் HD+ AMOLED ஸ்கிரீனை பெறுகிறது, இது ஒரு வியூவிங் எக்ஸ்பீரியன்ஸையும், கலர்ளையும் வழங்குகிறது. டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் பெரிய 5,000எம்ஏஎச் பேட்டரி இருந்த போதிலும் கூடுதலாக நேர்த்தியான டிசைனை கொண்டிருப்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம். இது ரூ.29,999 என்ற விலையில் இருந்து துவங்குகிறது.

ஒன்பிளஸ் நார்ட் 2 5ஜி (OnePlus Nord 2 5G):

ரூ.29,999 விலையில் MediaTek SoC ப்ராசஸரை கொண்டிருக்கும் நிறுவனத்தின் முதல் மொபைல் OnePlus Nord 2 5G ஆகும். இந்த ஃபோன் சிறப்பான MediaTek Dimensity 1200 AI சிப்செட் மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் 6.43-இன்ச் ஃபுல் HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஒளிரும் சூழலில் இதன் பின்புறத்தில் உள்ள 50-மெகாபிக்சல் ட்ரிபிள் கேமராக்கள் நல்ல செயல்திறனை வழங்குகின்றன. Warp Charge 65T ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை யூஸர்கள் பெற முடியும். இதன் 4500mAh டூயல்-செல் பேட்டரியை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.

போகோ எஃப்3 ஜிடி 5ஜி (Poco F3 GT 5G):

மொபைல் கேமிங் யூஸர்களுக்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ளது இந்த Poco F3 GT 5G ஃபோன். ரூ.28,999 என்ற விலையில் இருந்து துவங்கும் இது, MediaTek Dimensity 1200 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது கேம்பேட் (gamepad) போன்ற அனுபவத்தை வழங்க Maglev மெக்கானிக்கல் ட்ரிகர்ஸ்களுடன் வருகிறது. 8GBரேம், 256GB ஸ்டோரேஜ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 480 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் கொண்ட 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 64MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டிங்ஸ் கொண்டுள்ளது. 5,065mah பேட்டரி பேக்கை கொண்டு வருகிறது.

மோட்டோ எட்ஜ் 20 (Moto Edge 20):

144Hz ரெஃப்ரஷ் ரேட், 8GB ரேம், 4,000mAh பேட்டரி மற்றும் 108MP கேமராவுடன் 6.7-இன்ச் ஃபுல்-HD+ OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது Moto Edge 20. குறைந்தபட்ச bloatware-ருடன் க்ளீன் Android எக்ஸ்பீரியன்ஸை வழங்குவதாக நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்தியாவில் ரூ.29,999 என்ற விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது.

சியோமி எம்ஐ 11எக்ஸ் 5ஜி (Xiaomi Mi 11X 5G)

ரூ.29,999 என்ற விலையில் வரும் இது 6.67-இன்ச் ஃபுல்-HD+ E4 AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரஷ் ரேட், 360Hz டச் சாம்ப்பிளிங் ரேட் மற்றும் 1,300 nits பீக் பிரைட்னஸுடன் சிறந்த டிஸ்ப்ளே செயல்திறனை வழங்குகிறது. Qualcomm Snapdragon 870 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 4,520mAh பேட்டரி உள்ளன.

First published:

Tags: Smart Phone, YearEnder 2021