Home /News /technology /

6 புதிய வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்தது யமஹா!

6 புதிய வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்தது யமஹா!

யமஹா வயர்லெஸ் ஹெட்போன்

யமஹா வயர்லெஸ் ஹெட்போன்

அறிமுகம் செய்யப்பட்ட 6 மாடல்களில், 3 மாடல்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ளும் நெக் பேண்டு வடிவிலும், 3 மாடல்கள் இயர்போன்கள் வடிவிலும் உள்ளன.

மேம்பட்டு வரும் தொழில்நுட்பத்தில், புதிய மாடல்களில் மொபைல்களைப் போலவே, பல்வேறு அக்சசரீஸ்களும் அறிமுகம் ஆகின்றன. மொபைல்களுக்கு இருக்கும் கிரேஸ் போலவே, ஹெட்ஃபோன்களுக்கும் உள்ளன. ஹெட்போன்ஸ் பயன்பாடு என்பது பாடல் கேட்க என்பதைத் தாண்டி, கல்வி, வேலை, தெரபி என்று பல விதங்களில் தேவைப்படுகிறது. அதனை நிறைவேற்றும் வகையில் பல அம்சங்களுடன் புதுப்புது ஹெட்போன்கள் அறிமுகமாகின்றன. ப்ளூடூத் டிவைஸ் என்பதைத் கடந்து, நவீன வடிவத்தில் வயர்லஸ் ஹெட்போன்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் உள்ளது. நெக் பேண்ட், ஹெட் பேண்ட், ப்ளூடூத் வகை என்று பல மாடல்களில் வயர்லெஸ் ஹெட்போன்கள் கிடைக்கிறது. மேலும், யமஹா மியூசிக் இந்தியா 6 புதிய வகை வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

“யூசரின் சுற்றுப்புறத்துக்கு ஏற்ப, அடாப்ட் செய்து கொள்ளும் தன்மை தான் இந்த ஹெட்போன்களின் சிறப்பம்சம்” என்று நிறுவனம் தெரிவித்தது. அறிமுகம் செய்யப்பட்ட 6 மாடல்களில், 3 மாடல்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ளும் நெக் பேண்டு வடிவிலும், 3 மாடல்கள் இயர்போன்கள் வடிவிலும் உள்ளன. இந்த வயர்லெஸ் ஹெட்போன்கள் யமஹா மியூசிக் ஸ்டோர், அமேசான் ஆகிய இடங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

யமஹா YH-L700A ஓவர்-இயர் வயர்லெஸ் ஹெட்போன்

யமஹா YH-L700A வின் சதுர வடிவ இயர்-மஃப் தான் இதன் தனித்துவமான அம்சம். ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் வரும் இந்த ஹெட்போன், 3d சவுண்ட் ஃபீல்டு, ஹெட் டிராக்கிங் அம்சம் மற்றும் aptX அடாப்டிக் சப்போர்ட்டுடன், மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. இதன் பேட்டரி லைஃப் 34 மணி நேரங்கள். இதன் பேட்டரி லைஃப் 34 மணி நேரங்கள். இந்தியாவில் இது ரூ. 43,300 க்குக் கிடைக்கிறது.

யமஹா YH-L700A வயர்லெஸ் ஹெட்போன்

YH-L700A வயர்லெஸ் மாடலில் வட்ட வடிவ இயர்-மஃப் உள்ளது. இதற்கும் மேலே குறிப்பிட்ட ஓவர்-இயர் ஹெட்போனுக்கும் உள்ள இரண்டு வித்தியாசங்கள், நிறம் மற்றும் ஹெட் டிராக்கிங் அம்சம். கூடுதலாக, இந்த மாடலில் ‘listening optimiser’ உள்ளது. இது உங்களுக்கு ஏற்ற வகையில் ஒலியை ஆப்டிமைஸ் செய்யும். இதன் விலை ரூ. 29,900.

யமஹா YH-E500A ஓவர்-இயர் வயர்லெஸ் ஹெட்போன்

ஆக்டிவ் நாய்ஸ் கேன்ஷலேஷன் அம்சத்துடன் வரும் இந்த மாடலில் பாரம்பரியமான வட்ட வடிவ இயர்-மஃப்ஸ் உள்ளது. பாடல்களை அல்லது ஆடியோவைக் கேட்கும் போது சுற்றுப்புறத்தின் சத்தத்திற்கு ஏற்ப ஆம்பியன்ட் சவுண்ட் மோடு உள்ளது. இதன் பிளே-பேக் டைம் 38 மணிநேரங்கள். இதன் விலை, ரூ. 14,800.

Also read... போக்கோ M3 ப்ரோ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.800 வாங்க வேண்டுமா? இதோ சூப்பர் வழி இருக்கு!

யமஹா EP-E70A, EP-E50A மற்றும் EP-E30A வயர்லெஸ் ஹெட்போன்ஸ்

இந்த மூன்று மாடல்களும் நெக்-பேண்ட் வடிவத்தில் வருகின்றன. யமஹா EP-E70A 18 மணி நேர பேட்டரி லைஃபுடன், aptX அடாப்டிவ் உடன் ப்ளூடூத் 5, ஆம்பியன்ட் சவுண்ட், மேம்பட்ட ANC போன்ற அம்சங்களுடன் வருகின்றன. இதன் விலை ரூ. 23,600.

யமஹா EP-E50A இல், மேற்கூறிய அம்சங்களோடு, கூடுதலாக கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் சிரி சப்போர்ட் உள்ளது. இதன் விலை ரூ.12,400.

யமஹா EP-E30A மாடலில், லிஸ்சனிங் கேர், ப்ளூடூத் 5 அம்சங்களுடன் 14 மணிநேர பேட்டரி லைஃப் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.12,400.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Yamaha

அடுத்த செய்தி