ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நாஸ்டாலஜிக் நினைவுகளுடன் விடைபெறுகிறது Yahoo Groups..!

நாஸ்டாலஜிக் நினைவுகளுடன் விடைபெறுகிறது Yahoo Groups..!

யாஹூ

யாஹூ

புகைப்படங்கள், கோப்புகள் என யாஹூ தளத்தில் பயனாளர்கள் சேமித்து வைத்திருக்கும் அத்தனைத் தரவுகளையும் சேமித்துக்கொள்ளலாம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சுமார் இருபது ஆண்டுகளாக செயல்பட்டு வந்த Yahoo Groups சேவை நிறுத்தப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் உலகின் முன்னணி இன்டெர்நெட் நிறுவனமாக இருந்த Yahoo, யாஹூ க்ரூப்ஸ் சேவை மூலம் மிகவும் பிரபலமடைந்தது.

இந்நிலையில் யாஹூ குரூப்ஸ்  சேவையை நிறுத்திக்கொள்வதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகைப்படங்கள், கோப்புகள் என யாஹூ தளத்தில் பயனாளர்கள் சேமித்து வைத்திருக்கும் அத்தனைத் தரவுகளையும் சேமித்துக்கொள்ளலாம்.

யாஹூ நிறுவனத்தின் கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் யாஹூ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

’21-ம் நூற்றாண்டில் முதல் மாபெரும் சர்வதேச டெக் நிறுவனமாக வளர்ந்த நிறுவனம் யாஹூ. 2001-ம் ஆண்டு யாஹூ உருவான காலத்திலிருந்து இன்று வரையில் இன்டெர்நெட் உலகில் பல்வேறு அபரிமித மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனாலும், மெயில் முறைகளில் பல அப்டேட்களைத் தரத் தயாராகி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது யாஹூ.

மேலும் பார்க்க: இந்தியர்களுக்குத் தொடர் சிக்கலைத் தரும் வாட்ஸ்அப்..!

Published by:Rahini M
First published:

Tags: Yahoo