Home /News /technology /

மறைந்த புகழ்பெற்ற பாடகர் கே.கே-விற்கு டூடுலுடன் அஞ்சலி செலுத்திய Amul

மறைந்த புகழ்பெற்ற பாடகர் கே.கே-விற்கு டூடுலுடன் அஞ்சலி செலுத்திய Amul

Tribute to KK | பிரபலமான பால் பிராண்டான அமுல், தனது ஆத்மார்த்தமான குரலால் 2 தலைமுறைகளை மயக்கிய KK-க்கு சோஷியல் மீடியாவில் பொருத்தமான போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து அஞ்சலியை செலுத்தி உள்ளது.

Tribute to KK | பிரபலமான பால் பிராண்டான அமுல், தனது ஆத்மார்த்தமான குரலால் 2 தலைமுறைகளை மயக்கிய KK-க்கு சோஷியல் மீடியாவில் பொருத்தமான போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து அஞ்சலியை செலுத்தி உள்ளது.

Tribute to KK | பிரபலமான பால் பிராண்டான அமுல், தனது ஆத்மார்த்தமான குரலால் 2 தலைமுறைகளை மயக்கிய KK-க்கு சோஷியல் மீடியாவில் பொருத்தமான போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து அஞ்சலியை செலுத்தி உள்ளது.

புகழ்பெற்ற பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் (Krishnakumar Kunnath) என்ற ‘கேகே’ (KK) சமீபத்தில் நம்மை விட்டுப் பிரிந்ததார். பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லட்சக்கணக்கான ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளார் KK.

டெல்லியில் இந்து மலையாளக் குடும்பத்தில் சி. எஸ். நாயர் - குன்னத் கனகவல்லி தம்பதியருக்கு 1968 ஆகஸ்ட் 23-ம் தேதி பிறந்த கிருஷ்ணகுமார் குன்னத.  தமிழில் கடந்த1997-ல் வெளியான மின்சார கனவு துவங்கி விரைவில் வெளியாக உள்ள தி லெஜண்ட் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை கே.கே பாடியுள்ளார். இந்தி, தமிழ், மராத்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல ஹிட் பாடல்களை வழங்கி இருக்கிறார் KK.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ட்ராபெர்ரி கண்ணே, மன்மதன் படத்தில் காதல் வளர்தேன், எம்.குமரன் - சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நீயே நீயே, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் காதலிக்கும் ஆசையில்லை, கில்லி படத்தில் இடம்பெற்ற அப்படிப்போடு, காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே, 7/G ரெயின்போ காலனியில் இடம் பெற்ற நினைத்து நினைத்து பார்த்தேன் உள்ளிட்ட பல பாடல்களை பாடி இருக்கிறார். சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சா ஆடிட்டோரியத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கொண்டிருந்த போது, உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

Also Read : ரூ.38.80 லட்சம் பரிசுத்தொகை - அமெரிக்க உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அமெரிக்க மாணவி


கச்சேரி முடிந்ததும் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் உயிரிழந்தார் KK.




பிரபலமான பால் பிராண்டான அமுல், தனது ஆத்மார்த்தமான குரலால் 2 தலைமுறைகளை மயக்கிய KK-க்கு சோஷியல் மீடியாவில் பொருத்தமான போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து அஞ்சலியை செலுத்தி உள்ளது. பாடகர் KK-வின் 2 போட்டோக்களை கொண்ட ஒரு சிங்கிள் கலர் டூடுலை ஷேர் செய்து உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள 2 போட்டோக்ளும் பாடகர் KK இந்த உலகிற்கு விடைபெறுவதற்கு முன் பங்கேற்ற மேடை நிகழ்ச்சியில் அவரது கடைசி தருணங்களின் படமாக்கல் ஆகும்.

பிளாக் அண்ட் ஒயிட் டாப்பிக்கல் டூடுல் மூலம் KK-வின் கடைசி இசை நிகழ்ச்சியை சித்தரித்து இரங்கல் டூடுலை ஷேர் செய்து உள்ள அமுல், “Yaaron…yaad aayenge yeh pal." என்று கேப்ஷன் கொடுத்துள்ளது. இன்ஸ்டாவில் தொடர்ந்து லைக்ஸ்களை பெற்றுள்ள இந்த டூடுலை பார்த்த ஒரு யூஸர் “இசையில் தனது இறுதி மூச்சை விட்ட ஒரு பழம்பெரும் பாடகருக்கு உரிய அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி” என்று அமுலுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Amul

அடுத்த செய்தி