ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஒரே நிமிடத்தில் 70,000 போன்கள் விற்பனை; FlashSale-ல் பட்டைய கிளப்பிய Redmi

ஒரே நிமிடத்தில் 70,000 போன்கள் விற்பனை; FlashSale-ல் பட்டைய கிளப்பிய Redmi

redmi k50 gaming edition

redmi k50 gaming edition

விற்பனை தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளேயே Redmi K40 Gaming  ஸ்மார்ட்போன் 'அவுட் ஆஃப் ஸ்டாக்' ஆனது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமான Redmi K40 Gaming எடிஷனின் முதல் ஃபிளாஷ் சேல் நேற்று (பிப்.18) நடந்தது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையிலேயே கிட்டத்தட்ட 280 மில்லியன் யுவான், அதாவது தோராயமாக 44 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது

இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விற்பனை தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளேயே Redmi K40 Gaming  ஸ்மார்ட்போன் 'அவுட் ஆஃப் ஸ்டாக்' ஆனது. சியோமி நிறுவனத்தின் கூற்றுப்படி, தோராயமாக 70,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி கொண்டு இயங்கும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் அளவிலான ஓஎல்இடி எஃப்எச்டி+ டிஸ்ப்ளே, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480ஹெர்ட்ஸ் டச் சாம்ளிங் ரேட், 120W சார்ஜிங் சப்போர்ட், 4700 எம்ஏஎச் பேட்டரி, 64 எம்பி மெயின் கேமரா, 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

ரெட்மி கே50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை & இந்திய விற்பனை விவரங்கள்:

8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜை கொண்ட ரெட்மி கே50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்பபடி தோராயமாக ரூ.39,000 ஆகும், மறுகையில் உள்ள 12ஜிபி + 128ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் ஆனது முறையே தோராயமாக ரூ.42,600 மற்றும் சுமார் ரூ.46,000 க்கு வாங்க கிடைக்கும். குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் இந்தியா மற்றும் சர்வதேச விற்பனை குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

ரெட்மி கே50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

டூயல் சிம் ஆதரவு கொண்ட ரெட்மி கே50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயுஐ 13 கொண்டு இயங்குகிறது, மேலும் 6.67-இன்ச் ஃபுல் எச்டி+ அமோஎல்இடி பேனலைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேமேட் ஏ+ மதிப்பீடு கொண்டஇதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் செக்யூரிட்டியையும் பெறுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர் உடன் 12ஜிபிவரை வரையிலான எல்பிடிடிஆர்5 ரேம், டூயல் விசி கூலிங், 256ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ், ஜேபில் ஃபோர்-யூனிட் ஸ்பீக்கர், மேக்னட் பவர் பாப்-அப் ஷோல்டர் கீ 2.0, சைபர்எஞ்சின் அல்ட்ரா-வைட்பேண்ட் எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் போன்ற கேமிங்-ஸ்பெசிபிஃக் அம்சங்களையும் இது பேக் செய்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை, 64-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்686 மெயின் சென்சார் + 120 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூவுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டு உள்ளது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்596 செல்பீ கேமரா உள்ளது.

மேலும் இந்த லேட்டஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது 4,700எம்ஏஎச் பேட்டரியுடன் 120W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவையும் பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 17 நிமிடங்களில் போன் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் வரை, அதாவது முழுமையாக சார்ஜ் செய்யும். அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 162.5x76.7x8.5மிமீ மற்றும் எடையில் 210 கிராம் உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Redmi, Smart Phone, Xiaomi