Home /News /technology /

2022 ஆம் ஆண்டுக்கான பிரத்யேக மாடல்கள் எப்போது அறிமுகம் - தேதியை வெளியிட்டது ஸியோமி நிறுவனம்

2022 ஆம் ஆண்டுக்கான பிரத்யேக மாடல்கள் எப்போது அறிமுகம் - தேதியை வெளியிட்டது ஸியோமி நிறுவனம்

ஸியோமி

ஸியோமி

மார்ச் 15ஆம் தேதி சர்வதேச அளவிலான அறிமுகமாக ஸியோமி 12 சீரிஸ் வெளியிடப்பட்ட பிறகு, இந்தியாவில் அதை வெளியீடு செய்வதற்கான நடவடிக்கையை அந்த நிறுவனம் தொடங்க உள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான ஃபோன்களை ஒவ்வொன்றாக வெளியிடுவதற்கு ஸியோமி நிறுவனம் தயாராகி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டில் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க ஸ்மார்ட் ஃபோன்களை படிப்படியாக விற்பனைக்கு களமிறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஸியோமி 12 சீரீஸ் ஃபோன்கள் மார்ச் 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளன. குறிப்பாக, தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக அதி சிறப்பு வாய்ந்த ஃபோன்களை ஸியோமி நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, வெண்ணிலா ஸியோமி 12 என்ற மாடல் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஸியோமி 12 எக்ஸ் மற்றும் ஸியோமி 12 ப்ரோ ஆகிய மாடல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், ஸியோமி 12 அல்ட்ரா மாடலை பெறுவது எப்போது என்பதை தெரிந்து கொள்ள நாம் இன்னும் ஒரு வார காலம் காத்திருக்க வேண்டும்.

ஸியோமி 12 சீரீஸ் ஃபோன்களை அறிமுகம் செய்யும் விழா, சீனாவில் இருந்து உலகெங்கிலும் நேரலை செய்யப்பட இருக்கிறது. மார்ச் 15ஆம் தேதி, சீன நேரப்படி இரவு 8 மணிக்கு அந்த விழா தொடங்குகிறது. யூ டியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும், ஸியோமி நிறுவனத்தின் இணையதளத்திலும் நேரலையை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

ஸியோமி 12 சீரீஸ் வசதிகள்

வாடிக்கையாளர்களை கவரும் மிகவும் மேம்பட்ட வசதிகளை ஸியோமி 12 சீரீஸ் ஃபோன்களில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் என கருதப்படும் நிலையில், இந்த ஃபோன்களில் ஸ்நாப்டிராகன் 8 ஜெனரேஷன் சிப்செட்டை அவர்கள் அறிமுகம் செய்ய உள்ளதாக அறியப்படுகிறது.

இதேபோன்று ஃபோன்களின் கேமரா வசதி மற்றும் சார்ஜிங் திறன் ஆகியவற்றையும் ஸியோமி நிறுவனம் மேம்படுத்தியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஸியோமி 12 சீரிஸ் ஃபோன்களில் 150 மெகா பிக்ஸல் கேமரா இடம்பெற்றிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்ஜிங் வசதியை பொருத்தவரையில் ஃபாஸ்ட் - ஸ்பீடு என்ற தொழில்நுட்பத்தை ஸியோமி நிறுவனம் தொடங்க இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், முதன் முதலாக ஸியோமி 12 சீரிஸ் ஃபோன்கள் வாயிலாக அந்த வசதி, சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.

Also read... 30,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இதோ இந்த 6-ல் இருந்து ஒன்றை தேர்வு செஞ்சுக்கங்க!

இந்தியாவில் எப்போது கிடைக்கும்

மார்ச் 15ஆம் தேதி சர்வதேச அளவிலான அறிமுகமாக ஸியோமி 12 சீரிஸ் வெளியிடப்பட்ட பிறகு, இந்தியாவில் அதை வெளியீடு செய்வதற்கான நடவடிக்கையை அந்த நிறுவனம் தொடங்க உள்ளது. குறிப்பாக, இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமாகவும், வாடிக்கையாளர்களின் அபரிமிதமான ஆதரவு பெற்ற நிறுவனமாகவும் உள்ள நிலையில், ஸியோமி 12 சீரிஸ் ஃபோன்களை இங்கு அதிகம் ப்ரோமோட் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mobile phone, Xiaomi

அடுத்த செய்தி