இந்தியாவில் இம்மாதம் இரண்டு புதிய Mi ஆடியோ தயாரிப்புகளை வெளியிடுகிறது Xiaomi!

இந்தியாவில் இம்மாதம் இரண்டு புதிய Mi ஆடியோ தயாரிப்புகளை வெளியிடுகிறது Xiaomi!

அமேசானின் எக்கோ ஸ்பீக்கர்களுக்கு எதிராக நேரடியாக போட்டியிடும் Mi ஸ்மார்ட் ஸ்பீக்கரில் ஆடியோ சிக்னல்களை துல்லியமாக டிகோட் செய்ய ஹை-ஃபை ஆடியோ செயலி உள்ளது.

அமேசானின் எக்கோ ஸ்பீக்கர்களுக்கு எதிராக நேரடியாக போட்டியிடும் Mi ஸ்மார்ட் ஸ்பீக்கரில் ஆடியோ சிக்னல்களை துல்லியமாக டிகோட் செய்ய ஹை-ஃபை ஆடியோ செயலி உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வருகிற பிப்ரவரி 22ம் தேதி இந்தியாவில் புதிய ஆடியோ தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப்போவதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. என்ன மாதிரியான சாதனங்களை  வெளியாகின்றன என்பது குறித்து சரியான விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட ப்ரோமோஷனல் போஸ்டர் மூலம் சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி வயர்டு ஏர்பொன்ஸ்களையும், புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், நிறுவனம் கடந்த ஆண்டு சீனாவில் சியோமி டிவி ஸ்பீக்கர் தியேட்டர் எடிஷன் (Xiaomi TV Speaker Theater Edition) சவுண்ட்பார் ஆடியோ சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. இது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான Mi சவுண்ட்பாரை விட அதிக வரவேற்பை பெற்றது. இந்த Mi சவுண்ட்பார் இந்தியாவில் இரண்டு வண்ண விருப்பங்களில் ரூ. 4,999 என்ற விலையில் கிடைக்கிறது.

இந்த நிலையில் சியோமி இந்தியா எம்.டி மனு குமார் ஜெயின் கூறியதாவது, "எங்கள் நிறுவனம் இரண்டு புதிய ஆடியோ தயாரிப்புகளை கொண்டு வருகிறது" என தெரிவித்துள்ளார். மேலும் அந்த சாதனங்களின் வெளியீட்டு நிகழ்வு பிப்ரவரி 22 அன்று மதியம் 12:00 மணிக்கு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிறுவனத்தின் ஒரு பத்திரிகை அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தாவது, "எங்கள் சமீபத்திய ஆடியோ தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உங்களை அழைக்க விரும்புகிறோம். இது மற்ற தயரிப்புகளை விட சிறந்த முறையில் சவுண்டிங் அம்சங்களை வழங்கும்" என குறிப்பிட்டுள்ளது.



பல ஆண்டுகளாக, சியோமி நிறுவனம் இந்தியாவில் பலவிதமான ஆடியோ தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் TWS இயர்பட்ஸ், வயர்டு ஏர்போன்கள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சவுண்ட்பார் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனம் தனது Mi மற்றும் Redmi பிராண்டுகளின் கீழ் வயர்டு ஏர்போன்களை தலா 399 ரூபாய்க்கு விற்கிறது. சியோமி கடந்த ஆண்டு இந்தியாவில் 12W டிரைவர் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவுடன் Mi ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியது.

Also read... இந்தியாவில் அடுத்த மாதத்தில் அறிமுகமாகிறது 'Redmi Note 10'.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

அமேசானின் எக்கோ ஸ்பீக்கர்களுக்கு எதிராக நேரடியாக போட்டியிடும் Mi ஸ்மார்ட் ஸ்பீக்கரில் ஆடியோ சிக்னல்களை துல்லியமாக டிகோட் செய்ய ஹை-ஃபை ஆடியோ செயலி உள்ளது. இந்த சாதனம் இந்தியாவில் ரூ.3,999 க்கு கிடைக்கிறது. இதுதவிர அடுத்த தலைமுறை Redmi Note 10 சீரிஸ் இந்தியாவில் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Redmi Note 9 சீரிஸை விட ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸின் மற்ற விவரங்களை பற்றி இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. கூடுதலாக, புதிய ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்தியாவில் "அக்ரஸிவ்" விலையுடன் நிர்ணயிக்கப்படும் என்று ஒரு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: