65 இன்ச்... 4K மாடல்... Mi டிவியை செப் 17-ல் அறிமுகம் செய்கிறது ஜியோமி

தற்போதைய சூழலில் இந்தியாவில் Mi டிவி 4 ப்ரோ 55 இன்ச் மற்றும் Mi டிவி 4x ப்ரோ ஆகியன பெரிய ஜியோமி டிவி-க்களாக உள்ளன.

Web Desk | news18
Updated: September 13, 2019, 6:12 PM IST
65 இன்ச்... 4K மாடல்... Mi டிவியை செப் 17-ல் அறிமுகம் செய்கிறது ஜியோமி
Mi TV 65 இன்ச்
Web Desk | news18
Updated: September 13, 2019, 6:12 PM IST
ஜியோமி நிறுவனம் புதிய 65 இன்ச் 4K மாடல் Mi டிவி-யை வருகிற செப்டம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

சீன நிறுவனமான ஜியோமியின் மிகச்சிறந்த விற்பனைச் சந்தையாக இந்தியா உள்ளது. டெக் பொருட்களைப் பொறுத்த வரையில் இந்தியர்களின் விருப்பமாகவும் ஜியோமி உள்ளது. சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் டிவி விற்பனையில் ஜியோமியே முதலிடத்தில் உள்ளது.

பல டெக் தயாரிப்புகளை அறிமுகம் செய்த ஜியோமி புதிதாக Mi டிவி-யை அறிமுகம் செய்கிறது. இந்த டிவி குறித்த முழு விவரங்கள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. புதிய 64 இன்ச் டிவி உடன் Mi பேண்ட் 4 அறிமுகமாகும் எனத் தெரிகிறது. ஜியோமியின் Mi பேண்ட் ரகங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் இப்புதிய ஃபிட்னெஸ் பேண்ட் 2,999 ரூபாய்க்கு அறிமுகமாகலாம்.


Mi பேண்ட் 3-யை விட பல புதிய அப்டேட்களும் வண்ணமயமான OLED டிஸ்ப்ளேவும் Mi பேண்ட் 4-ல் இடம்பெறும். 2020-ம் ஆண்டு அறிமுகம் ஆவதாய் இருந்த Mi டிவி செப்டம்பர் 17-ம் தேதியே வெளியாவது குறித்து இந்திய Mi தலைவர் மனு குமார் ஜெயின் ஒரு வீடியோ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் மூலமாகவே சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன. தற்போதைய சூழலில் இந்தியாவில் Mi டிவி 4 ப்ரோ 55 இன்ச் மற்றும் Mi டிவி 4x ப்ரோ ஆகியன பெரிய ஜியோமி டிவி-க்களாக உள்ளன.

மேலும் பார்க்க: டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் அதிக இடங்களில் சாம்சங்... முதலிடத்தைப் பிடித்த போன் எது?

மூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!

Loading...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...