அறிமுகமாகிறது ஜியோமியின் 65 இன்ச் Mi எல்.இ.டி டிவி!

டிவி-க்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்பட்டதால் டிவி விலைகளும் குறைந்துள்ளன.

Web Desk | news18
Updated: January 4, 2019, 12:59 PM IST
அறிமுகமாகிறது ஜியோமியின் 65 இன்ச் Mi எல்.இ.டி டிவி!
ஜியோமி 65” டிவி
Web Desk | news18
Updated: January 4, 2019, 12:59 PM IST
இந்தியாவில் முதன்முறையாக ஜியோமியின் 65 இன்ச் Mi LED TV அறிமுகமாகிறது. இதற்கான அறிமுக டீசரை ஜியோமி இந்தியத் தலைவர் மனுகுமார் வெளியிட்டுள்ளார்.

ஜியோமியின் புதிய அறிமுகத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் மனு குமார் வெளியிட்டு அறிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “MI 2டிவி-யின் பெருந்திரை விரைவில் வருகிறது” எனக் குறிப்பிட்டு இருந்தார். சீன நிறுவனமான ஜியோமியின் மிகப்பெரிய திரை கொண்ட டிவி 55 இன்ச் கொண்டதாக உள்ளது. இதற்கு அடுத்ததாக 65” டிவியை இந்தியாவில் முதன்முறையாக ஜியோமி களம் இறக்குகிறது.

சீனாவில் முன்னதாகவே அறிமுகமான 65 இன்ச் டிவி இந்திய மதிப்பில் சுமார் 63,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சமீபத்தில் இந்திய ஜியோமி தனது தயாரிப்புகளின் விலை நிலவரத்தைக் குறைப்பதாக அறிவித்தது.
Loading...


இதன் அடிப்படையில் Mi ஸ்மார்ட் டிவி 4A 32”, 4C PRO 32", 4A PRO 42” ஆகிய டிவி-க்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரையில் விலைப் பட்டியலில் தள்ளுபடியும் உள்ளது.

இந்தியாவில் மத்திய அரசின் புதிய உத்தரவின் பெயரில் டிவி-க்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைந்ததே இந்த விலை தள்ளுபடிகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து..! சினிமா18
First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...