ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஜியோமியின் அத்தனை ஸ்மார்ட்போன்களும் 5ஜி ஆகவே வெளியாகும்..!

ஜியோமியின் அத்தனை ஸ்மார்ட்போன்களும் 5ஜி ஆகவே வெளியாகும்..!

ஜியோமி

ஜியோமி

5ஜி உடன் AIoT தொழில்நுப்டத் திறனும் ஜியோமி போன்களில் உட்படுத்தப்பட உள்ளன.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  வருகிற 2020-ம் ஆண்டு முதல் ஜியோமி சார்பில் வெளியாகும் அத்தனை ஸ்மார்ட்போன்களும் 5ஜி தொழில்நுட்பத்துடனே இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  5ஜி தொழில்நுட்பத் துணை உடனான ஸ்மார்ட்போன்கள் 20 ஆயிரம் ரூபாய் முதல் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஜியோமி சிஇஓ லீ ஜுன் வெளியிட்டுள்ளார். 2020-ன் முதல் பாதியில் சுமார் 10, 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுவிட வேண்டும் என்பது ஜியோமியின் குறிக்கோளாக உள்ளது.

  முதலாவதாக ஜியோமி Mi Mix 3 5G மற்றும் ஜியோமி Mi Mix Alpha ஆகிய போன்கள் வெளியாக உள்ளன. 5ஜி உடன் AIoT தொழில்நுட்பத் திறனும் ஜியோமி போன்களில் உட்படுத்தப்பட உள்ளன. மேலும் வருகிற நவம்பர் 26-ம் தேதி புதிதாக ஒரு தயாரிப்பு வெளியீடும் உள்ளது என சர்ப்ரைஸ் தரத் தயாராகி உள்ளது ஜியோமி.

  மேலும் பார்க்க: 1.5 பில்லியன் டவுன்லோடுகளைப் பெற்ற டிக்டாக்... வருவாய் அளிக்கும் இந்தியா..!

  Published by:Rahini M
  First published:

  Tags: Xiaomi