ஜிபிஎஸ், வைஃபை, ஸ்பீக்கர் என அசத்தும் ஜியோமி ஸ்மார்ட்வாட்ச்..!

ஜியோமி ஸ்மார்ட் வாட்ச், புதிய Mi டிவி சீரிஸ் மற்றும் Mi CC9 Pro ஸ்மார்ட்போன் ஆகியன வருகிற நவம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.

ஜிபிஎஸ், வைஃபை, ஸ்பீக்கர் என அசத்தும் ஜியோமி ஸ்மார்ட்வாட்ச்..!
ஜியோமி ஸ்மார்ட்வாட்ச்
  • News18
  • Last Updated: October 29, 2019, 5:12 PM IST
  • Share this:
ஜியோமி தனது ஸ்மார்ட்வாட்ச்-ன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. Mi பேண்ட் போல் இல்லாமல் கூடுதல் ஸ்மார்ட் ஆக விரைவில் வெளிவர உள்ளது ஜியோமியின் ஸ்மார்ட் வாட்ச்.

ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை ஜியோமியின் சிஇஓ லீ ஜுன் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட் வாட்ச் அதிகாரப்பூர்வ பெயர் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. 3டி க்ளாஸ் தோற்றத்தில் மிளிரும் ஜியோமி ஸ்மார்ட் வாட்ச் நிச்சயம் சந்தையில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கறுப்பு மற்றும் சில்வர் நிறங்களில் மட்டும் இந்த ஜியோமி ஸ்மாட் வாட்ச் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்த வாட்சில் ஜிபிஎஸ், NFC, வைஃபை, பெரிய பேட்டரி, ஸ்பீக்கர் என அசத்துகிறது. தோற்றத்தைத் தவிர வேறெந்தத் தகவல்களும் தெரியவில்லை.


ஜியோமி ஸ்மார்ட் வாட்ச், புதிய Mi டிவி சீரிஸ் மற்றும் Mi CC9 Pro ஸ்மார்ட்போன் ஆகியன வருகிற நவம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.

மேலும் பார்க்க: ’பேமண்ட் ஆப்’ வெளியிட்ட ஜியோமி... ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கான Mi Pay App

2019 குருபெயர்ச்சி பலன்கள்
First published: October 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading