சீன நிறுவனமான ஜியோமி, இந்தியாவில் தனது தயாரிப்புகளில் புதிதாக வீட்டு உபயோக பொருள் ஒன்றையும் சேர்த்துள்ளது. அதுதான் Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2. இந்த வகை ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 மாடல்கள் மற்ற ஃபேன்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலேயே மின்சாரத்தை செலவு செய்யும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மின்விசிறியில் குரல் கட்டுப்பாடு வசதி(voice control) உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 இந்தியாவில் திங்களன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சீன நிறுவனத்தின் இந்த புதிய கண்டுபிடிப்பானது Xiaomiயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் எளிதில் ஆர்டர் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
இதில் silent BLDC inverter motorand 7+5 wing-shaped blade உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விசிறியை சவுண்ட்(voice control) மூலம் கட்டுப்படுத்தலாம். Xiaomi Smart Standing Fan 2 ஆனது 100 ஸ்பீடு கண்ட்ரோல் (speed control) உள்ளது வியப்பை ஏற்ப்படுத்துகிறது.
இந்தியாவில் Xiaomi Smart Standing Fan 2 மாடலின் விலை ரூ. 9,999. இது நாம் விரும்பும் வண்ணங்களில் விற்கப்படுவதோடு, இதை நாம் நிறுவனத்தின் இணையதளத்தில் முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த மாடல் தற்போது சிறப்பு வெளியீட்டு விலையாக 5,999 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும், இந்த விற்பனை முறையே ஜூலை 19 அன்று தொடங்கும் என்றும் Xiaomi தெரிவித்துள்ளது.
Also Read : டிவி-க்களை ஆன்லைனில் வாங்கவே அதிக இந்தியர்கள் விரும்புகிறார்கள் - சர்வேயில் வெளியான தகவல்!
Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2ன் எடை 3 கிலோவாக இருப்பதால், இது மிகவும் லேசானதாகவும் ,நமது தேவைக்கேற்றபடி வீட்டின் எந்த இடத்தில் வைத்து உபயோகிக்கவும் ஏற்றது. இதில் 7 + 5 இறக்கைகள் உள்ளது . இதனால் Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 அதிக அளவு காற்றோட்டத்தை உருவாக்கும் என்றும் இந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Xiaomi தனது ஸ்மார்ட் ஃபேனில் BLDC copper-wire இன்வெர்ட்டர் மோட்டாரைப் பொருத்தியுள்ளதால், இந்த மின்விசிறியை நம்மால் அதிக நேரம் இயக்க முடியும். மற்ற மோட்டார்களை விட இந்த மோட்டார் அதிக நாட்கள் செயல்படும். இந்த ஸ்மார்ட் மின்விசிறி, 15W வாட்ஸை விட குறைவான அளவில் மின்சாரத்தை பயன்படுத்துவதால் மின் கட்டணம் குறையும்.
Also Read : உங்கள் ஐபோன் பேட்டரியை பாதுகாக்க இந்த தவறுகளை தவிர்க்கவும்
சாதாரண மின்விசிறியுடன் ஒப்பிடுகையில் BLDC மோட்டார் அதிக ஒலியை எழுப்பாது. இதன் ஒலி 30.2dB முதல் 55.8dB வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நமது தேவைக்கேற்ப இதன் உயரத்தை மாற்றி அமைக்கும் வகையில் Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 ல் ஸ்டீல் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்று இதையும் கட்டுப்படுத்தலாம் என Xiaomi நிறுவனம் கூறியுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fans, Technology, Xiaomi