• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வெறும் 1 மணி நேரத்திற்குள் 5 லட்சம் ரெட்மி நோட் 11 மொபைல்கள் விற்பனை!

வெறும் 1 மணி நேரத்திற்குள் 5 லட்சம் ரெட்மி நோட் 11 மொபைல்கள் விற்பனை!

ரெட்மி நோட் 11

ரெட்மி நோட் 11

அடுத்தபடியாக 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆரம்ப விலையாக ரூ.18,700க்கு விற்கப்படுகிறது.

  • Share this:
    ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு கொண்டாட்டமான விஷயம் என்றால் தங்களுக்கு பிடித்த பிராண்ட் வெளியிடும் புதுவித வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தான். அதுவும் நம் பட்ஜெட்டில் ஐபோன் போன்ற ஒரு மொபைலை நாம் எப்போதும் எதிர்பார்ப்பது சகஜம். இப்படிப்பட்ட ஒரு தரமான மொபைலை தான் ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி நோட் 11, நோட் 11 ப்ரோ, நோட் 11 ப்ரோ+ போன்ற புதுவித ரெட்மி மாடல் ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் சீனாவில் வெளியிட்டுள்ளது.

    இந்நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன்களுக்கான வரவேற்பு மிக அதிகமாக இருந்தது. வெறும் 1 மணி நேரத்திற்குள்ளே இதன் வெற்றியை ஜியோமி நிறுவனம் தெரிந்து கொண்டது. இவற்றின் விற்பனை தொடங்கிய உடனே 5 லட்சம் பேர் இந்த ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கி விட்டனர். முதல் 52 நிமிடம் 11 நொடிகளுக்குள் 4 பில்லியன் யுவான்கள் வரை விற்பனை நடந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 46 ஆயிரம் கோடிகள் ஆகும்.

    அடுத்த 1 நிமிடம் 45 நொடிக்குள் 2 பில்லியன் யுவான் விற்பனை நடந்தது. இது போன்ற சாதனை விற்பனைகளை ஜியோமி நிறுவனம் ஏற்கனவே நிகழ்த்தியுள்ளது. இருப்பினும் இம்முறை இதன் விற்பனை மதிப்பு அதிகமாகி உள்ளது. தற்போது சீனாவில் விற்பனையாகின்ற இந்த ரெட்மி நோட் 11 வெனிலா மாடல் சீரிஸ் 14000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் இதில் தரப்பட்டுள்ளது.

    Also read... தீபாவளி கொண்டாட்டம்: சலுகை விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஃபோன், வாட்ச் மற்றும் டிவிக்கள்!

    அடுத்தபடியாக 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆரம்ப விலையாக ரூ.18,700க்கு விற்கப்படுகிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் விலை ரூ.22000-இல் இருந்து தொடங்குகிறது. இவற்றுடன் ஸ்பெஷல் எடிஷனாக ரெட்மி நோட் 11 Yibo என்கிற ஸ்மார்ட்போன் மாடலும் உள்ளது. இது 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டது. இதன் விலை ரூ.31,500ல் இருந்து தொடங்குகிறது.

    இந்த வகை ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 108 MP ட்ரிப்பிள் கேமராவும், 5 ஜி வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் சிறந்த டிஸ்பிளே அனுபவத்திற்கு AMOLED வகை டிஸ்பிளே இதில் உள்ளது. இவற்றின் ரெப்ரஷ் ரேட் 120 Hz ஆகும். தரமான பயன்பாட்டிற்காக MediaTek Dimensity 810 ஆக்டா கோர் புரசாசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

    சீனாவில் இந்த ரெட்மி நோட் 11 சீரிஸ் தனது வெற்றி முத்திரையை பதித்திருந்தாலும், இந்திய சந்தைக்கு கொண்டு வருவது பற்றி ஜியோமி நிறுவனம் தெளிவாக தெரியப்படுத்தவில்லை. உலகளவில் ஏற்பட்டுள்ள சிப்களின் தட்டுப்பாடுகளே இதற்கு காரணமாக இருக்கலாம். அப்படியே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்க தொடங்கினாலும், இதன் அப்கிரேட்களை பொறுத்து இவற்றின் விலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: