Mi A2 ஸ்மார்ட்ஃபோன் விலையில் ₹4,500 வரை குறைப்பு

இன்று முதல் இந்த விலைக் குறைப்பு உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.

Web Desk | news18
Updated: January 7, 2019, 7:45 PM IST
Mi A2 ஸ்மார்ட்ஃபோன் விலையில் ₹4,500 வரை குறைப்பு
இன்று முதல் இந்த விலைக் குறைப்பு உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
Web Desk | news18
Updated: January 7, 2019, 7:45 PM IST
சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஜியோமி தனது Mi A2 ஸ்மார்ட்ஃபோனின் விலையை 4,500 ரூபாய் வரையில் குறைப்பதாக இன்று அறிவித்துள்ளது.

இன்று ஜியோமி வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இன்று முதலே இந்த விலைக் குறைப்பு உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Xiaomi Mi A2 13,999 ரூபாய்க்கு இனி விற்கப்படும். இதேபோல் இதன்படி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Xiaomi Mi A2 15,999 ரூபாய்க்கும் விற்கப்படும்.

5.99 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Xiaomi Mi A2 ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. 20 மற்றும் 12 மெகா பிக்சல்களில் இரண்டு கேமிராக்கள் உள்ளன. செல்ஃபி எடுப்பதற்கான எல்.இ.டி ஃப்ளாஷ் லைட் இணைக்கப்பட்டுள்ளது. 3010mAh பேட்டரி உடன் Mi A2 உள்ளது.

விலை குறைக்கப்பட்ட Xiaomi Mi A2 ஸ்மார்ட்ஃபோனை அமேசான், mi.com ஆகிய ஆன்லைன் தளங்களிலும் Mi Home ஸ்டோர் மற்றும் இதர முன்னணி ஸ்டோர்களிலும் இன்று முதலே விற்பனைக்கு உள்ளது.

மேலும் பார்க்க: ரயில் நிலையத்துக்கு பயணிகள் 20 நிமிடங்களுக்கு முன்னரே வர வேண்டுமா?
First published: January 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...