இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஜியோமியின் ரெட்மிபுக் 13 லேப்டாப்!

ரெட்மிபுக் 13 லேப்டாப் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி கொண்டுள்ளது. கூடுதலாக 2ஜிபி கிராபிக்ஸ் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஜியோமியின் ரெட்மிபுக் 13 லேப்டாப்!
ஜியோமியின் ரெட்மிபுக் 13
  • News18
  • Last Updated: February 11, 2020, 3:19 PM IST
  • Share this:
இந்தியாவில் முதன்முறையாகத் தனது லேப்டாப்பை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது ஜியோமி நிறுவனம்.

ரெட்மி இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை முதல் ஜியோமியின் ரெட்மிபுக் 13 விற்பனைக்கு வருகிறது. 13.3 இன்ச் டிஸ்ப்ளே, முழு ஹெச்டி உடன் அசத்தல் தோற்றத்தில் உள்ளது ரெட்மிபுக் 13. இந்த லேப்டாப் 10-ம் ஜென் இன்டெல் கோர் ப்ராசஸர் அடிப்படையில் இயங்குகிறது.

ஆனால், இந்தியாவில் முதற்கட்டமாக Core i5 configuration லேப்டாப் மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரெட்மிபுக் 13 லேப்டாப் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி கொண்டுள்ளது. கூடுதலாக 2ஜிபி கிராபிக்ஸ் மெமரி வழங்கப்பட்டுள்ளது.


DTS ஆடியோ, ப்ளுடூத் 5.0, NFC, டூயல் பேண்ட் வைஃபை ஆகியன சிறப்பம்சங்களாக உள்ளனர். 40 வாட்ஸ் பேட்டரி திறன் கூடுதல் பலமாக உள்ளது.

மேலும் பார்க்க: இந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் உங்கள் மொபைலில் உள்ளதா? உடனே ‘டெலிட்’ செய்துவிடுங்கள்!
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading