இந்தியாவில் ரூ.7,999-க்கு விற்பனையைத் தொடங்கிய ரெட்மி 6

ரெட்மி 6 Pro,ரெட்மி Note 5 Pro, ரெட்மி Y2, மற்றும் Mi A2 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது. #Redmi #Xiaomi

இந்தியாவில் ரூ.7,999-க்கு விற்பனையைத் தொடங்கிய ரெட்மி 6
ரெட்மி 6 ப்ரோ (மாதிரிப்படம்)
  • News18
  • Last Updated: January 13, 2019, 12:27 PM IST
  • Share this:
நிரந்திரமாக விலையைக் குறைத்து ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனைச் சந்தையில் டாப் லிஸ்டில் இடம்பெற போட்டிப்போட்டு வருகிறது ஜியோமியின் துணை நிறுவனமான ரெட்மி.

2019-ம் ஆண்டு முதல் ஜியோமியின் துணை நிறுவனமாக ரெட்மி தனித்தே செயல்படும் என ஜியோமியின் தலைமைச் செயல் அதிகாரி லீ ஜூன் அறிவித்திருந்தார். இதன்படி, ஜியோமியில் இருந்து கிளை பிரிந்த ரெட்மி, Mi மற்றும் Poco ஆகிய மூன்றும் துணை நிறுவனங்களாக தனித்தனியே செயல்படத் தொடங்கியுள்ளன.

ஜியோமியிலிருந்து பிரிந்து தனித்து இயங்கத் தொடங்கிய ரெட்மி தொடர்ந்து விலைக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்ஃபோனான ரெட்மி நோட் 7, கடந்த சில நாட்களுக்கு முன், சீனாவில் சிறந்த பட்ஜெட் போனாக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


ஜியோமி நிறுவனம் (Image: Reuters)


Mi Home மற்றும் இதர ஸ்டோர்கள் மட்டுமல்லாது ஃப்ளிப்கார்ட், Mi.com ஆகிய ஆன்லைன் விற்பனைத் தளங்களிலும் குறைக்கப்பட்ட விலைப்பட்டியலுடன் களம் இறங்கியுள்ளது ரெட்மி. புத்தாண்டு சிறப்புச் சலுகையாக மட்டுமே விலைத் தள்ளுபடி அறிவித்த ரெட்மி தற்போது அதே விலையை நிரந்திரமாக்கி உள்ளது.

ரெட்மி 6 Pro, ரெட்மி Note 5 Pro, ரெட்மி Y2, மற்றும் Mi A2 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 3ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 6 ஸ்ம்டார்ட்ஃபோனின் விலை 7,999 ரூபாய் ஆக உள்ளது. இதேபோல், 3ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 6 ஸ்மார்ட்ஃபோனின் விலை 8,999 ஆக உள்ளது.மேலும் பார்க்க: ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம் நூலின் மறுபதிப்பு வெளியீடு..
First published: January 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்