Home /News /technology /

ஜியோவுடன் இணைந்து இறுதி கட்ட சோதனையில் சியோமி K50i - இந்தியாவில் 5G நெட்வொர்க்.!

ஜியோவுடன் இணைந்து இறுதி கட்ட சோதனையில் சியோமி K50i - இந்தியாவில் 5G நெட்வொர்க்.!

Redmi K50i

Redmi K50i

Redmi K50i | 2ஜி,3ஜி,4ஜி , இதைத்தொடர்ந்து தற்போது 5ஜி அலைக்கற்றை வரிசையில், புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம் ஆகி வருகின்றன. Xiaomi Redmi K50i ஸ்மார்ட்போன், 12, 5G பேண்டுகளுடன் அறிமுகமாகும் முதல் ரெட்மி ஃபோனாகும்.

சியோமி ரெட்மி K50i ஸ்மார்ட்ஃபோன் அடுத்தவாரம் இந்தியாவில் அறிமுகமாகப் போகிறது. இந்த மாடலை அறிமுகம் செய்ய நிறுவனம் ஏற்கனவே தயாராக உள்ள நிலையில், இந்தியாவில் 5G எப்படி இருக்கும் என்பது பற்றி பலகட்ட நெட்வொர்க் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில், இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5G டெஸ்டிங் செய்து வந்ததில், அட்டகாசமான முடிவுகள் கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

2ஜி,3ஜி,4ஜி , இதைத்தொடர்ந்து தற்போது 5ஜி அலைக்கற்றை வரிசையில், புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம் ஆகி வருகின்றன. Xiaomi Redmi K50i ஸ்மார்ட்போன், 12, 5G பேண்டுகளுடன் அறிமுகமாகும் முதல் ரெட்மி ஃபோனாகும். இதில் n1, n3, n5, n7, n8, n20, n28a, n38, n40, n41, n77, n78 என்ற 12 பேண்டுகள் உள்ளன. ரெட்மி நிறுவனம், இந்தியாவின் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5G நெட்வொர்க் ஆகியவற்றுக்கு இடையே இயங்கும் தன்மையை இந்த 5G கெப்பாசிட்டி சோதனை மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம் வரும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. சில ஃபிரிகியூயன்சி பேண்டுகளுக்கு மிகுந்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏலம் முடிந்த பிறகு ஜியோ, ஏர்டல் மற்றும் Vi ஆகிய மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு 5G சேவைகளை வழங்கும். ஏற்கனவே, சந்தையில் பல விதமான 5G-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவை எதிர்காலத்துக்கு ஏற்றதா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.



அதனால்தான், இந்த ரெட்மி K50i ஸ்மார்ட்ஃபோனில் பல விதமான 5G பேண்டுகளை ஆதரிக்கிறது. இதன் மூலம், ஏற்கனவே சந்தையில் இருக்கும் 5G மாடல்களை விட இது மேம்பட்டதாக உள்ளது. சியோமி நிறுவனம், தனது ஸ்மார்ட்ஃபோனின் 5G சோதனைகளை பரிசோதனையை லேபில் நடத்தாமல், லேபின் வெளியிடங்களில் நடத்தியது. அதாவது, இந்த 5G சோதனையில், ரெட்மி K50i ஜியோ நெட்வொர்க்கின் 4K ஸ்ட்ரீமிங் மற்றும் கிளவுட் கேமிங் அமைப்புகளில் சொதிக்கபப்ட்டது. அதாவது, அதி வேக டேட்டா என்பது அத்தியாவசியமாக இருக்கும் தளங்களில் சோதனை செய்யப்பட்டது.

Also Read : இந்தியாவில் Xiaomi புதிய மாடல் தயாரிப்புகள் வெளியானது.!

ரெட்மி K50i ஸ்மார்ட்ஃபோனைப் பொறுத்தவரை, இந்த மாடலில் மீடியாடேக் டிமென்சிட்டி சிப்செட் உடன், 144Hz டிஸ்ப்ளே உள்ளதாக அறியப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ரெட்மி நிறுவனம் மீண்டும் ஒரு K சீரிஸ் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

Also Read : உங்கள் ஐபோன் பேட்டரியை பாதுகாக்க இந்த தவறுகளை தவிர்க்கவும்

5G போன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ரெட்மியின் புதிய மாடல் என்பதே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எனவே, ரெட்மி K50i, பல்வேறு ப்ரீமியம் மற்றும் மிடில்-ரேன்ஜ் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு போட்டியாக இருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: 5G technology, Smartphone, Xiaomi

அடுத்த செய்தி