தொடக்கத்திலேயே ஆண்ட்ராய்ட் அப்டேட் ஆஃப்ஷன்! அசத்தலாக வருகிறது ரெட்மி K20, K20 Pro

8ஜிபி+ 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி K20 ப்ரோ 30,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகின்றன.

Web Desk | news18
Updated: July 21, 2019, 5:28 PM IST
தொடக்கத்திலேயே ஆண்ட்ராய்ட் அப்டேட் ஆஃப்ஷன்! அசத்தலாக வருகிறது ரெட்மி K20, K20 Pro
ரெட்மி K20
Web Desk | news18
Updated: July 21, 2019, 5:28 PM IST
ரெட்மி நிறுவனத்திலிருந்து புதிதாக விற்பனைக்கு வந்துள்ள K20 மற்றும் K20 Pro ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தத் தொடங்கும்போதே ஆண்ட்ராய்டை அப்டேட் செய்யமுடியும். 

சீன நிறுவனமான ஜியோமி கடந்த ஜூலை 17-ம் தேதி ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 Pro ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்களையும் அறிமுகப்படுத்தியது. ஜூலை 22-ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

இதனால், ரெட்மி K20, K20 Pro வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கையில் ஃபோன் கிடைத்ததுமே புது அப்டேட் காத்திருக்கும். ரெட்மி K20 ஸ்மார்ட்ஃபோனுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் 471MB கொண்டதாகவும் K20 Pro 475MB கொண்டதாகவும் உள்ளது.


ஜியோமியின் வெளியீடுகளிலேயே புதிய ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. ரெட்மி K20 6ஜிபி+64ஜிபி 21,999 ரூபாய்க்கும் மற்றும் 6ஜிபி+128ஜிபி ஃபோன் 23,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளன.

6ஜிபி+128ஜிபி கொண்ட ரெட்மி K20 ப்ரோ 27,999 ரூபாய்க்கும் 8ஜிபி+ 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி K20 ப்ரோ 30,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகின்றன.

மேலும் பார்க்க: இன்ஸ்டாகிராமில் ‘ஹேக்கிங் பக்’... கண்டறிந்த தமிழருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு!
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...