ரெட்மி ஸ்மார்ட்ஃபோனுடன் ஜியோ வழங்கும் ரூ.2,200 கேஷ்பேக், 100 GB டேட்டா ஆஃபர்!!

ரெட்மி கோ ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது கேஷ்பேக் சலுகை மற்றும் 100 ஜிபி இணையதள டேட்டாவையும் ரிலையன்ஸ் ஜியோ வழங்குகிறது.

Web Desk | news18
Updated: March 22, 2019, 8:06 PM IST
ரெட்மி ஸ்மார்ட்ஃபோனுடன் ஜியோ வழங்கும் ரூ.2,200 கேஷ்பேக், 100 GB டேட்டா ஆஃபர்!!
ரெட்மி கோ
Web Desk | news18
Updated: March 22, 2019, 8:06 PM IST
உலகின் மிகப் பெரிய மொபைல் டேட்டா நெட்வொர்க் சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ, ரெட்மி கோ ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி கேஷ்பேக் சலுகையை வழங்கியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையைப் பிடித்துள்ள சியோமியின் ரெட்மி கோ ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது கேஷ்பேக் சலுகை மற்றும் 100 ஜிபி இணையதள டேட்டாவையும் ரிலையன்ஸ் ஜியோ வழங்குகிறது.

சியோமியின் ரெட்மி கோ ஸ்மார்ட்ஃபோன் 2019 மார்ச் 22-ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.


ரெட்மி கோ ஸ்மார்ட்ஃபோனில் ஜியோ சிம் பயன்படுத்தும் போது ரூ.198 மற்றும் ரூ. 299 ரீசார்ஜ் செய்தால் 2,200 ரூபாய் கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி இலவச டேட்டாவும் கிடைக்கும். இந்த கேஷ்பேக் 44 கூப்பன்களாக கிடைக்கும். ஒவ்வொரு கூப்பனுக்கும் 50 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். ஆனால் குறைந்தது 198 ரூபாய்க்கு மைஜியோ செயலி மூலம் ரீசாஜ் செய்யும் போது மட்டுமே சலுகை வழங்கப்படும். அதாவது இந்த கூப்பனை பயன்படுத்தி 198 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 148 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

100 ஜிபி டேட்டா 10 கூப்பனாக வழங்கப்படும். ஒவ்வொரு கூப்பனுக்கும் 10 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி கோ ஸ்மார்ட்ஃபோன் அறிமுக சலுகையாக 4,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஃபோனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 1.45 GHz சிப்செட், 1 ஜிபி ரேம், 8 ஜிபி உட்புற சேமிப்பகம், 8 மெகா பிக்செல் பின் பக்க கேமரா, 5 மெகா பிக்சல் முன்பக்க கேமரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ஃபோனை ஃபிளிப்கார்ட்டில் வாங்கும் போது ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கூடுதலாக 5 சதவீத சலுகையும் கிடைக்கும்.

Loading...

மேலும் பார்க்க:
First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...