முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / 2023ல் சந்தைக்கு வரவிருக்கும் Xiaomi & Poco ஸ்மார்ட்போன்கள்!

2023ல் சந்தைக்கு வரவிருக்கும் Xiaomi & Poco ஸ்மார்ட்போன்கள்!

சியோமி மொபைல்

சியோமி மொபைல்

சியோமி 13 மாடலில் 50 எம்பி அளவிலான சோனி ஐஎம்எக்ஸ்800 பிரைமரி சென்சாரும் 10 எம்பி அளவிலான டெலிபோட்டோ லென்சும், 12 எம்பி அளவிலான அல்ட்ரா ஒயிட் சென்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 4-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சியோமி நிறுவனம் குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனமாக வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையை பெற்றுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பலவிதமான மாடல்களில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. ரெட்மி மற்றும் போக்கோ என்ற துணை நிறுவனங்களின் பெயரிலும் இந்த ஆண்டு பல போதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றியும் அதன் வசதிகளை பற்றி இப்போது விரிவாக பார்ப்போம்.

ரெட்மி நோட் 12 4ஜி : 

கடந்த ஜனவரி மாதம் ரெட்மி நோட் 12 5ஜி மாடலானது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது அந்த நிறுவனமானது அதே ரெட்மி நோட் 2 மாடலில் 4ஜி டிவைஸை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடல் இரண்டு வித ஸ்டோரேஜ் வேரியண்டுகளில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி அளவிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ராம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய வகைகளில் இது வெளிவரலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 மீது இயங்கும் எம்ஐயுஐ 14 இதில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த போனின் விலை இந்திய மதிப்பில் 15 ஆயிரம் ரூபாயாகவும், இந்த ஆண்டின் முதல் கால் பகுதியில் இது அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ :

சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ அந்த நிறுவனத்தின் பிளாக்ஷிப் மொபைல்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் மிக விரைவாக இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி உடன் 12 ஜிபி ராம் மற்றும் 520 இன்டெர்னல் மெமரியுடன் இது வெளிவரவிருக்கிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் அனைத்தும் செயல்பாடுகளும் ஒரே விதத்தில் இருந்தாலும் இவற்றின் திரையில் மட்டும் தான் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சியோமி 13 மாடலில் 6.36 இன்ச் அளவிலான ஒலெட் திரையும் சியோமி 13 ப்ரோ மாடலில் 6.73 இன்ச் அளவிலான கர்வ்ட் 2K ஒலெட் திரையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டிலுமே 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய ஹெச்டிஆர் 10பிளஸ் சப்போர்ட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

சியோமி 13 மாடலில் 50 எம்பி அளவிலான சோனி ஐஎம்எக்ஸ்800 பிரைமரி சென்சாரும் 10 எம்பி அளவிலான டெலிபோட்டோ லென்சும், 12 எம்பி அளவிலான அல்ட்ரா ஒயிட் சென்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 32 எம்பி அளவிலான செல்பி கேமராவும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சியோமி 13 ப்ரோ மாடலை பொருத்தவரை அனைத்து மூன்று பிரைமரி பின்பக்க கேமராக்களிலும் 50 எம்பி அளவிலான பிரைமரி சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரியை பொருத்தவரை சியோமி 13 மாடலில் 4500 பேட்டரியும், சியோமி 13 ப்ரோ மாடலில் 4820MAH பேட்டரியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் புரோ வேரியண்டில் 120 வாட்ஸ் சார்ஜிங் அளவிலான ப்ரோ வேரியன்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ஆனது 50,000 ரூபாய் வரை இருக்கலாம் என்றும், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

சியோமி 12T மற்றும் சியோமி 12T ப்ரோ :

சியோமி 13 மாடலை போலவே சியோமி 12T சீரிஸும் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி 12T மற்றும் சியோமி 12T ப்ரோ இரண்டு மாடல்களுமே தற்போது சீனாவில் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவற்றில் 6.67 இன்ச் அளவிலான 1.5k அமோலெட் திரையும் 120 ஹெர்ட்ஸ் அளவிலான ரிஃப்ரெஷ் ரேட்டும் அளிக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை 8எம்பி அளவிலான அல்ட்ரா வைட் கேமரா சென்சாரும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 எம்பி அளவிலான மேக்ரோ லென்ஸும் 20 எம்பி அளவிலான செல்பி கேமராவும் இதில் உள்ளது.

பேட்டரியை பொருத்தவரை 5௦௦௦ எம்ஏஎச் அளவிலான பேட்டரி திறனுடன் 120 வாட்ஸ் அளவிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களிலும் அவற்றின் சிப்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 12T மாடலானது மீடியா டெக் டைமண்ஸிட்டி 8100-அல்ட்ரா சிப்புடன், 108 எம்பி அளவிலான கேமராவை கொண்டுள்ளது. 12T ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப் மற்றும் ஓஐஎஸ் வசதி கொண்ட 200 எம்பி பிரைமரி கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மொபைல்களுமே ஆண்ட்ராய்டு 12 மீது இயங்கும் எம்ஐயுஐ 13 பயனர் இடைமுகத்தை கொண்டிருக்கும். இதன் விலையானது ரூபாய் 45 ஆயிரத்திற்கு விற்கப்படலாம் எனவும், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி 13 லைட் :

சியோமி 13 லைட் மாடல் ஆனது உலக சந்தையில் ஒரு மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட சியோமி சிவி 2 என்ற மாடலின் மறு உருவாக்கமாகவே இது கருதப்படுகிறது. இந்த சிவி 2 மாடல் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் அளவிலான எஃப்எஎச்டி+ வசதி மற்றும் 120 ஹெட்ஸ் அளவிலான அமோலெட் திரையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் சென்சாரை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 எஸ்ஓசி சிப் மற்றும் அதனோடு 4500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி அளிக்கப்பட்டுள்ளது. 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் பொறுத்த வரை 12ஜிபி அளவிலான ராமுடன் 256 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டுள்ளது. இதில் 50 எம்பி அளவிலான பிரைமரி கேமரா, 50 எம்பி அளவிலான அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2எம்பி அளவிலான மேக்ரோ கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 32 எம்பி+32 எம்பி டூயல் வசதி கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.

இதன் ஆரம்ப விலை ரூபாய் 40 ஆயிரத்திற்கு இருக்கலாம் என்றும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த மொபைல் விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்ப்பப்படுகிறது.

ரெட்மி கே60 சீரியஸ் :

ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல்களின் வரிசையில் இந்த ரெட்மி கே60 சீரிஸ் இடம் பிடித்துள்ளது. இதில் ரெட்மி கே 60 ப்ரோ, ரெட்மி கே60 மற்றும் ரெட்மி கே60 இ என்ற மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளன. இவற்றின் 6.6 இன்ச் அளவிலான ஓலெட் தொடுதிரை பயன்படுத்தப்பட்டுள்ளது. கேமராவை பொருத்தவரை 16 எம்பி அளவிலான செல்பி கேமராக்களும், 8 அம்பி அளவிலான அல்ட்ரா வைட் சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 500 எம்ஏஎச் அளவிலான பேட்டரி வசதியுடன், 120 வாட்ஸ் அளவிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சென்சார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி கே 60 மாடலின் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சென்சாரும், கே 60 இ மாடலில் டைமன்ஸிட்டி 8200 சென்சாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப விலை 30 ஆயிரம் வரை இருக்கலாம் என்றும் இந்த ஆண்டின் இரண்டாம் கால் பகுதியில் இவை விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 12 டர்போ:

சியோமி நிறுவனமானது தன்னுடைய ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ரெட்மி நோட் 12 டர்போ மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 சாக் செட்டில் இயங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிடைத்துள்ள தகவல்களின்படி இதில் 6.67 இன்ச் அளவிலான எப்ஹெச்டி+ ஒலெட் திரையும் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் ஸ்டோரேஜ் பொறுத்த வரை 12 ஜிபி ராம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் மெமரியை இது கொண்டிருக்கும். இந்த மொபைல் 50 எம்பி அளவிலான பிரைமரி கேமராவுடன், 8 எம்பி அளவிலான அல்ட்ரா ஒயிட் கேமரா மற்றும் 2 எம்பி அளவிலான மேக்ரோ சென்சாரை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை 5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் 67 வாட்ஸ் திறன் கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப விலை ரூபாய் 20,000 இருக்கலாம் என்றும், இந்த ஆண்டில் இரண்டாம் கால் பகுதியில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Redmi, Smart Phone, Smartphone, Technology, Xiaomi