விற்பனைக்கு வந்தது ஜியோமி ரெட்மி 8A... பட்ஜெட் விலையில் அறிமுகமானதால் நல்ல வரவேற்பு!

செப்டம்பர் 29-ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட், Mi.com ஆகிய தளங்களில் விற்பனை தொடங்கும்.

விற்பனைக்கு வந்தது ஜியோமி ரெட்மி 8A... பட்ஜெட் விலையில் அறிமுகமானதால் நல்ல வரவேற்பு!
ரெட்மி 8A
  • News18
  • Last Updated: September 25, 2019, 10:21 PM IST
  • Share this:
ரெட்மி 8 சீரிஸின் கீழ் ஜியோமி புதிதாக ரெட்மி 8A ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ரெட்மி 7A போனின் அப்டேடட் வெர்ஷனாக ரெட்மி 8A வெளியாகி உள்ளது. இந்த போனின் விலை 6,499 ரூபாய் ஆக உள்ளது. P2i நானோ கோட்டிங் உடன் ஹேண்ட்செட் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாக உள்ளது. வாட்டர் ட்ராப் டிஸ்ப்ளே கவர்வதாக உள்ளது.

6.22 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்நாப்ட்ராகன் 439 SoC, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது. பின்புறத்தில் 12 மெகாபிக்சல் உடனான சோனி IMX363 சென்சார் கேமிரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது.


4 ஜி வோல்ட், வைஃபை, ப்ளுடூத் v5.0, ஜிபிஎஸ், ஃஎப்.எம், யூஎஸ்பி டைப் சி மற்றும் 3.5mm ஜெட்போன் ஜேக் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி 8A 5,000mAh பேட்டரி திறன் இணைப்பு உள்ளது. 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் 6,499 ரூபாயும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் 6,999 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 29-ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட், Mi.com ஆகிய தளங்களில் விற்பனை தொடங்கும்.

மேலும் பார்க்க: யூட்யூப் கிரியேட்டர்களைத் தாக்கும் ஹேக்கர்கள்... மாயமாகும் இந்திய சேனல்கள்..!

EXCLUSIVE கீழடி பொருட்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு
First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்