நான்காம் முறையாக விலையைக் குறைத்த ஜியோமி- 9,999 ரூபாய்க்கு Redmi 6 Pro

4 ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ரேம் என இரண்டுக்கும் 1,000 ரூபாய் வரையில் விலை குறைக்கப்பட்டுள்ளது

Web Desk | news18
Updated: January 10, 2019, 1:10 PM IST
நான்காம் முறையாக விலையைக் குறைத்த ஜியோமி- 9,999 ரூபாய்க்கு Redmi 6 Pro
ஜியோமி (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: January 10, 2019, 1:10 PM IST
ஜியோமி ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் நான்காவது முறையாக தனது இந்தியச் சந்தைக்கான ஸ்மார்ட்ஃபோன் விலையைக் குறைத்துள்ளது.

பெய்ஜிங்கைச் சேர்ந்த ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஜியோமி Redmi 6 Pro இனி இந்தியாவில் 9,999 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இதே மாடலில் 4 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் 11,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதற்கு முன்னர் Redmi Y2 விலை குறைக்கப்பட்டு 8,999 ரூபாய்க்கும், Mi A2 விலை குறைக்கப்பட்டு 13,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வந்தது.

இதுகுறித்து ஜியோமி இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், “Redmi 6 Pro ஸ்மார்ட்ஃபோனின் வகைகளான 4 ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி ரேம் என இரண்டுக்கும் 1,000 ரூபாய் வரையில் விலை குறைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமான ஜியோமி Redmi 6 Pro, 10,999 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 9,999 ரூபாய்க்கு ஆன்லைன் மட்டுமல்லாது அனைத்து ஸ்மார்ட்ஃபோன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: தமிழில் பேசிய தமிழக பொறியாளருக்கு விமான நிலையத்தில் தடை
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...