Home /News /technology /

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Xiaomi Pad 5-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்..

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Xiaomi Pad 5-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்..

Xiaomi Pad 5

Xiaomi Pad 5

Xiaomi நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் அதன் டேப்லெட் (tablet) போர்ட்ஃபோலியோவை Xiaomi Pad 5 டிவைஸ் அறிமுகத்துடன் தொடங்கி உள்ளது.

Xiaomi நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் அதன் டேப்லெட் (tablet) போர்ட்ஃபோலியோவை Xiaomi Pad 5 டிவைஸ் அறிமுகத்துடன் தொடங்கி உள்ளது. இந்த டேப்லெட் அதன் பிரிவில் உள்ள மற்ற டிவைஸ்களை போலல்லாமல் உள்ளது. ஏனெனில் Xiaomi Pad 5 ஹை ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த ப்ராசஸர் மற்றும் ஸ்மார்ட் பேனாவை சப்போர்ட் செய்கிறது. நல்ல ஸ்பெஸிஃபிகேஷன்கள் மற்றும் அம்சங்கள் நிறைந்த இது ஒரு மிட்-ரேஞ்ச் tablet ஆக உள்ளது. இது ஸ்டைலஸ் சப்போர்ட்டுடன் 120Hz ரெஃப்ரேஷ் ரேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் Xiaomi Pad 5 டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது Xiaomi நிறுவனம். பல வருடங்களுக்கு பிறகு இந்தியால் அறிமுகப்படுத்தி உள்ள இந்த டேப்லெட்டை இங்கு அறிமுகப்படுத்த 8 மாதங்கள் ஆகி உள்ளது.

Xiaomi Pad 5 ஸ்பெஸிஃபிகேஷன்கள்:

Xiaomi Pad 5 டேப்லெட்டானது பிளாஸ்டிக் ரியர் பேனல் மற்றும் மெட்டல் ஃபிரேமை கொண்டுள்ளது. இது 254.69 x 166.25 x 6.85 மிமீ டைமென்ஷன்ஸ் மற்றும் 511 கிராம் எடை கொண்டது. இந்த டேப்லெட் 2560 x 1600 பிக்சல்கள் (WQHD+), 275 PPI மற்றும் 120Hz ரெஃப்ரேஷ் ரேட்டுடன் 10.95-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவை (LCD display) கொண்டுள்ளது. இது 6GB ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 860 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 256GB வரையிலான ஸ்டோரேஜை வழங்குகிறது.

இந்த டேப்லெட்டின் பின்புறம் 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. Mi Pad 5 ஆனது டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மூலம் இயங்கும் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் ஆகியவற்றிற்கான சப்போர்ட்டுடன் கூடிய குவாட் ஸ்பீக்கர்களைக் (quad speakers) கொண்டுள்ளது. இது பயணத்தின் போது திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து மகிழ உதவியாக இருக்கும். Xiaomi Pad 5 டேப்லெட்டானது 128GB மற்றும் 256GB ஆகிய 2 ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. 128GB வேரியன்ட்டின் விலை ரூ.26,999-ஆகவும், 256GB வேரியன்ட்டின் விலை ரூ.28,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும் வரும் மே 7-ஆம் தேதி வரை இந்த டேப்லெட் வேரியன்ட்கள் முறையே ரூ.24,999 மற்றும் ரூ.26,999 என்ற சலுகை விலைக்கு வாங்கலாம்.

Also read... RealMe GT 2 | இந்தியாவில் அறிமுகம்.. இந்த போனில் என்ன ஸ்பெஷல்?

மேலும் இந்த 2 ஸ்டோரேஜ் வேரியன்ட்களும் 6GB ரேம் உடன் வருகின்றன. மேலும் இதில் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இல்லை. தவிர இதில் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், ஃபிங்கர் பிரின்ட் கைரேகை சென்சார் எதுவும் இல்லை. இந்த டிவைஸ் ப்ளூடூத் 5 மற்றும் OTG சப்போர்ட்டுடன் USB Type-C போர்ட்டையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் Xiaomi Pad 5 8,720mAh பேட்டரியை கொண்டுள்ளது. Xiaomi Pad 5-ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த டிவைஸ் Mi.com, Mi Home, Amazon India மற்றும் ரீட்டெயில் ஸ்டோர்ஸ் வழியே மே 3-ஆம் தேதியிலிருந்து விற்கப்பட உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Xiaomi

அடுத்த செய்தி