Home /News /technology /

Xiaomi OLED Vision TVயின் இந்திய விற்பனை ஆரம்பம்: விலை, சலுகைகள் & அம்சங்கள்!

Xiaomi OLED Vision TVயின் இந்திய விற்பனை ஆரம்பம்: விலை, சலுகைகள் & அம்சங்கள்!

Xiaomi OLED Vision TV

Xiaomi OLED Vision TV

Xiaomi OLED Vision TV | ஓஎல்இடி டிவி மாடல்கள் ஆனது பிரீமியம் பிரிவிற்குள் ஒதுக்கப்பட்டுள்ளதால், இவ்வகை டிவிகளின் விலை ரூ.1 லட்சத்திற்கு மேல் தான் இருக்கும். ஆனால் சியோமி நிறுவனம் அதன் லேட்டஸ்ட் அறிமுகத்தின் வாயிலாக ஓஎல்இடி சந்தையில் ஒரு புரட்சியை செய்ய முனைவது போல் தெரிகிறது.

மேலும் படிக்கவும் ...
சியோமி நிறுவனத்தின் முதல் ஓஎல்இடி டிவியான சியோமி ஓஎல்இடி விஷன் டிவி (Xiaomi OLED Vision TV) ஆனது தற்போது இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. சியோமி நிறுவனம் அதன் ஓஎல்இடி விஷன் டிவி மாடலை 55-இன்ச் என்கிற ஸ்க்ரீன் சைஸில் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் இது டால்பி விஷன் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு ஓஎல்இடி பேனலைக் கொண்டிருப்பதால், நீங்கள் டீப் பிளாக்ஸ்-ஐ பெறுவீர்கள் என்று சியோமி நிறுவன உறுதி அளிக்கிறது.

பொதுவாகவே, ஓஎல்இடி டிவி மாடல்கள் ஆனது பிரீமியம் பிரிவிற்குள் ஒதுக்கப்பட்டுள்ளதால், இவ்வகை டிவிகளின் விலை ரூ.1 லட்சத்திற்கு மேல் தான் இருக்கும். ஆனால் சியோமி நிறுவனம் அதன் லேட்டஸ்ட் அறிமுகத்தின் வாயிலாக ஓஎல்இடி சந்தையில் ஒரு புரட்சியை செய்ய முனைவது போல் தெரிகிறது.

ஏனெனில் இந்தியாவில் சியோமி ஓஎல்இடி விஷன் டிவியின் விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, உடன் சில விற்பனை சலுகைகள், கவர்ச்சிகரமான வங்கி தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் வழியாக வாடிக்கையாளர்கள் இந்த டிவியின் விலையை இன்னும் குறைக்கலாம்.

நீங்கள் எச்டிஎப்சி பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால், சியோமி உங்களுக்கு ரூ.6,000 என்கிற உடனடி தள்ளுபடியை வழங்குகிறது மற்றும் ஸெஸ்ட்மணி மூலம் பணம் செலுத்தினால் ரூ.7,500 வரை கேஷ்பேக் கிடைக்கும், மேலும் பேடிஎம் மூலம் பணம் செலுத்துவதன் மூலம் நீங்கள் 10 சதவீதம் (ரூ.750 வரை) கேஷ்பேக் பெறும் வாய்ப்பும் உள்ளது.



சியோமி ஓஎல்இடி விஷன் டிவியின் அம்சங்கள்:

சியோமி ஓஎல்இடி விஷன் டிவி ஆனது பெரிய ஸ்க்ரீன் + பிரீமியம் அனுபவத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ். 3840×2160 பிக்சல்ஸ், 4கே ரெசல்யூஷன், டால்பி விஷன், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 98.5 சதவிகிதம் வைட் கலர் கேமட் டிசிஐ-பி3 மற்றும் எச்டிஆர்10+ ஆதரவு உடனான ஓஎல்இடி டிஸ்ப்ளே பேனலை கொண்டுள்ளது.

Also Read : அடேங்கப்பா.. பென்ஸ் காரை விட விலை அதிகமான LG டிவி - இந்தியாவில் அறிமுகம்!

டால்பி அட்மோஸ் மற்றும் டிடிஎஸ்-எக்ஸ் ஆதரவுடன், நான்கு பேசிவ் மற்றும் நான்கு ஆக்டிவ் ட்ரைவர்களை உள்ளடக்கிய எட்டு-ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் இந்த டிவி வருகிறது. மேலும் சியோமி ஓஎல்இடி விஷன் டிவி ஆனது ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட பிரபலமான பேட்ச்வால் யூஐ 4 மூலம் இயங்குகிறது.

Also Read : MyGov ஹெல்ப் டெஸ்க் வழியே பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸை இந்திய வாட்ஸ்அப் யூஸர்கள் இனி அணுகலாம்!

சியோமி ஓஎல்இடி விஷன் டிவி ஆனது குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ73 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது மாலி ஜி52 எம்சி1 ஜிபியு, 3ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆப்ஸ் மற்றும் பிற டேட்டாக்களை சேமிக்க இது 32ஜிபி ஸ்டோரேஜையும் வழங்குகிறது. கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இது மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், ஈத்தர்நெட் போர்ட், வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.0 ஆகியவைகளை வழங்குகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Technology, Xiaomi

அடுத்த செய்தி