ஆக்ஸிஜன் மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் ஜியோமி வாட்ச் - விலை எவ்வளவு தெரியுமா?

ஜியோமி வாட்ச்

இந்த எம்ஐ வாட்ச் ரிசால்வ் ஆக்டிவ்-ல் பிளட் ஆக்ஸிஜன் மானிட்டர் (SpO2)உள்ளது இதன் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

  • Share this:
பிளட் ஆக்ஸிஜன் மானிட்டருடன் கூடிய ஜியோமி எம்ஐ வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் (Mi Watch Revolve Active) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமோ அல்லது இஎம்ஐ மூலமாகவோ வாங்கினால் ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். இந்த வாட்ச்சானது எம்ஐ ஹோம் ஸ்டோர், எம்ஐ.காம், அமேசான் இந்தியா, ஆகியவற்றில் வருகிற ஜூன் 25ம் தேதி முதல் கிடைக்கும்.

எம்ஐ வாட்ச் ரிசால்வ் ஆக்டிவ்-ன் வசதிகள்

இந்த எம்ஐ வாட்ச் ரிசால்வ் ஆக்டிவ்-ல் பிளட் ஆக்ஸிஜன் மானிட்டர் (SpO2)உள்ளது இதன் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. மேலும் இதில் எனர்ஜி மானிட்டர், ஹார்ட் ரேட் மானிட்டர், தூக்கத்தை கண்காணிக்க ஸ்லீப் டிராக்கிங், ஸ்டிரெஸ் டிராக்கிங் மற்றும் சுவாசத்தை கண்காணிக்க ப்ரீத் டிராக்கிங் (Breathing tracking) ஆகியவை இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் இதில் உடற்பயிற்சி செய்யும் போது அதிகப்பட்சமாக எவ்வளவு ஆக்ஸிஜன் நம் உடலுக்குள் செல்கிறது என்பதை கண்காணிக்க VO2 மேக்ஸ் சென்சார் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம் உடலில் செயல்பாடுகளை அதாவது Vital Sign மற்றும் ஹார்ட் ரேட்டை 30 நாட்கள் வரை கண்காணிக்கும். மேலும் இதில் Airoha GPS உள்ளது. இது GPS, GLONASS, Galileo, BDS ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். மேலும் 117 ஸ்போர்ட் மோட் மற்றும் 110 வாட்ச் ஃபேசஸ் இதில் உள்ளது. இதில் 1.39 இஞ்ச் AMOLED ஸ்கிரீன், 454x454 பிக்சல் ரிசொல்யூசன் உடன் கிடைக்கும். 450 nits பிரைட்னஸ் இதில் கிடைக்கும். இந்த வாட்ச்சில் எப்பொழுதும் டிஸ்பிளே ஆன் செய்தபடி கிடைக்கும். மேலும் இதில் 420 mAh பேட்டரி. இந்த பேட்டரியின் செயல்பாடு 14 நாட்கள் நீட்டிக்கும்.

Also read... வாட்ஸ்அப் கன்ஃபர்ம் செய்த மிக முக்கிய அப்டேட்- என்ன தெரியுமா?

லாங் பேட்டரி மோடில் 22 நாட்கள் வரை வரும் என ஜியோமி தெரிவித்துள்ளது. இதில் மேக்னெட்டிக் சார்ஜிங் பாட் உள்ளது. இதன் மூலம் 2 மணி நேரத்தில் வாட்ச்சை சார்ஜ் செய்ய முடியும். எம்ஐ வாட்ச் ரிசால்வ் ஆக்டிவ் ஆனது கால் மற்றும் மெசேஜ் வாட்ச்சில் பார்க்கலாம். இந்த வாட்ச் கருப்பு, நேவி ப்ளூ கலர் ஆப்சனுடன் வரும். இதன் ஸ்டிராப் கருப்பு, நீலம், பச்சை , வெள்ளை மற்றும் பர்பிள் ஆகிய கலர்களில் கிடைக்கும். ஜியோமி நிறுவனம் சமீபத்தில் எம்ஐ 11 லைட் ஃபோனை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த ஃபோனில் வசதிகள் மற்றும் கவர்ச்சிகரமான போனின் லுக் ஆகியவை ஸ்மார்ட் போன் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: