’பேமண்ட் ஆப்’ வெளியிட்ட ஜியோமி... ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கான Mi Pay App

இத்தனைக் காலம் Mi ஆப் ஸ்டோரில் மட்டுமே இருந்த இந்த செயலி தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது.

’பேமண்ட் ஆப்’ வெளியிட்ட ஜியோமி... ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கான Mi Pay App
Mi Pay ஆப்
  • News18
  • Last Updated: October 29, 2019, 2:05 PM IST
  • Share this:
இந்தியாவில் டிஜிட்டல் பேமன்ட் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் வர்த்தகத்தின் முன்னேற்றத்தால் ஜியோமி நிறுவனம் புதிதாக Mi Pay App ஒன்றை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜியோமியின் Mi Pay App இடம்பெற்றுள்ளது. Mi Pay செயலியை அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளர்களும் தற்போது பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இத்தனைக் காலம் Mi ஆப் ஸ்டோரில் மட்டுமே இருந்த இந்த செயலி தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது.

இதனால், பேடிஎம், போன்பே, அமேசான் பே, வாட்ஸ்அப் பே ஆகிய செயலிகளுக்கு நேரடிப் போட்டியாகக் களத்தில் இறங்கியுள்ளது Mi Pay App. Mi Pay, கிரெடிட், டெபிட் கார்டு, நெட் பேங்கிங், UPI பேமன்ட் முறைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும். மொபைல் பில், ரீசார்ஜ், மின்சாரக் கட்டணம், டிடிஹெச், ப்ராட்பேன், லேண்ட்லைன் கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியும்.


மேலும் பார்க்க: இந்த ஓராண்டில் மட்டும் உங்கள் இன்டெர்நெட் வேகம் எவ்வளவு அதிகரித்திருக்கிறது தெரியுமா?

கைதி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்..!
First published: October 29, 2019, 1:56 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading