Mi மேக்ஸ், Mi நோட் சீரிஸ்கள் நிறுத்தப்படுகிறது- ஜியோமி தலைவர் லேய் ஜுன்

Mi மேக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களைப் பொறுத்த வரையில் 6 இன்ஸ் ஸ்கீரினை விட பெரிய ஸ்கிரீன் ஆப்ஷன் தர முயற்சித்து வருகிறது ஜியோமி.

Web Desk | news18
Updated: June 24, 2019, 3:57 PM IST
Mi மேக்ஸ், Mi நோட் சீரிஸ்கள் நிறுத்தப்படுகிறது- ஜியோமி தலைவர் லேய் ஜுன்
mi-max
Web Desk | news18
Updated: June 24, 2019, 3:57 PM IST
Mi மேக்ஸ், Mi நோட் வரிசையில் எவ்வித புதிய வெளியீடுகளும் இருக்காது என ஜியோமி நிறுவனத் தலைவர் லேய் ஜுன் தெரிவித்துள்ளார்.

சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஜியோமியின் தலைமை நிர்வாக அதிகாரி லேய் ஜுன் கூறுகையில், “Mi மேக்ஸ், Mi நோட் ஆகிய ஸ்மார்ட்ஃபோன் வரிசையில் புதிதாக ஒரு மொபைலையும் அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை. மாறாக, ரெட்மி, Mi MIX சீரிஸ், Mi 9 மற்றும் புதிய CC சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் மீது இனி ஜியோமி கவனம் செலுத்தும்” என்றார்.

ஜியோமி நோட் சீரிஸ்களிலேயே நல்ல விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளியான ஸ்மார்ட்ஃபோன், ரெட்மி K20. Mi மேக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களைப் பொறுத்த வரையில் 6 இன்ஞ் ஸ்கீரினை விட பெரிய ஸ்கிரீன் ஆப்ஷன் தர முயற்சித்து வருகிறது ஜியோமி.


புதிதாக அறிமுகமாக உள்ள CC சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் பல டீசர்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது ஜியோமி. உலகின் அத்தனை இளைஞர்களையும் கவரும் வகையிலேயே CC சீரிஸ் அறிமுகம் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது..!- பதிவு செய்யும் நடைமுறைகள் என்ன?
First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...