உலகளாவிய ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி(Xiaomi). குறைந்த விலையில் ஏராளமான நவீன அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு தந்து செல்ஃபோன் உலகை கலக்கி கொண்டிருக்கும் சியோமி, தன் ரசிகர்களை குஷிப்படுத்தவும் மேலும் புதிய பலர் தங்கள் தயாரிப்புகளை வாங்க ஊக்குவிப்பதியும் நோக்கமாக கொண்டு ஆண்டுதோறும் எம்ஐ ஃபேன் ஃபெஸ்டிவல் சேல் (Mi Fan Festival sale) என்ற மாபெரும் தள்ளுபடி திருவிழாவை நடத்தி வருகிறது.
இதன் போது நம்ப முடியாத அளவிற்கு தனது தயாரிப்பு பொருட்களுக்கான விலையை வியக்க வைக்கும் அளவில் குறைத்து வாடிக்கையாளர்களின் மனதில் மேலும் இடம் பிடித்து வருகிறது சியோமி நிறுவனம். இந்த ஆண்டிற்கான "Mi Fan Festival 2021" திருவிழாவில் வழக்கம் போல Mi ஸ்மார்ட்ஃபோன்கள், Mi டிவி-கள், Mi லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகள் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடியை சியோமி வழங்குகிறது. ஏப்ரல் 8-ம்- தேதியான இன்று துவங்கியுள்ள "எம்ஐ ஃபேன் ஃபெஸ்டிவல்"வரும் ஏப்ரல் 13 வரை நடைபெறுகிறது.
இந்த விற்பனையின் போது, இன்று முதல் ஏப்ரல் 13 வரை ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்கு ரூ.1 ஃப்ளாஷ் சேல் நடக்க உள்ளது. இந்த விற்பனையின் போது சியோமி தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு வெறும் 1 ரூபாய்க்கு எடுத்துச் செல்லலாம். அதே போல ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் 12 வரை“Pick n Choose” சலுகையும் உள்ளது. இந்த சலுகையின் போது வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் தயாரிப்பு பண்டல்களை உருவாக்கி, அதற்கேற்ப டீல்களை பெறலாம்.
Also read... வாட்ஸ்அப்பில் கொரோனா ஸ்டிக்கர்ஸ் - சத்தமில்லால் வந்த புதிய அப்டேட்!
இந்த விற்பனையின் போது சியோமியின் மி ஸ்மார்ட் பேண்ட் 4, மி பியர்ட் டிரிம்மர் 1 சி மற்றும் ரெட்மி 20,000 எம்ஏஎச் பவர் பேங்க் உள்ளிட்டவை ரூ.1,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. மேலும் ரெட்மி இயர்பட்ஸ் 2 சி, மி நோட்புக் 14 மற்றும் மி நோட்புக் 14 ஹொரைஸனை ரூ .1,000-க்கும் குறைவான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பையும் நிறுவனம் வழங்கும். இந்த 5 நாள் தள்ளுபடி விற்பனை திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என சியோமி கூறியுள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கி யூசர்கள் சியோமி மி 10ஐ மற்றும் மி 10 டி சீரிஸ்களில் சிறப்பு தள்ளுபடியை பெறுவார்கள்.
ஐசிஐசிஐ வங்கி யூசர்கள் ரெட்மி நோட் 10 ப்ரோ சீரிஸில் தள்ளுபடியைப் பெறுவார்கள், ஆக்சிஸ் வங்கி யூசர்கள் டிவி, லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளில் சிறப்பு தள்ளுபடியை பெறுவார்கள் என்றும் சியோமி தெரிவித்துள்ளது. மி நோட்புக் ஹொரைசன் 14 லேப்டாப் மற்றும் மி 10 டி புரோ ஸ்மார்ட்போன் ரூ .13,000 தள்ளுபடியில் கிடைக்கும். ரெட்மி நோட் 9 ரூ .8,000 தள்ளுபடியிலும், சியோமி மி டிவி 4 ஏ ஹொரைசன் எடிஷன் 43 அங்குல டிவி ரூ .4,000 தள்ளுபடியிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஐ ஃபேன் ஃபெஸ்டிவல் ஆன்லைனில் (mi.com-இல்) துவங்கி நடைபெற்று வருகிறது. இது ஏற்கனவே ஆஃப்லைன் எம்ஐ ஹோம் கடைகளில் நேரலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.