காதலர் தின சிறப்பு விற்பனைத் திருவிழாவை அடுத்து தற்போது மீண்டும் ஜியோமி சேல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளம் மூலம் வாடிக்கையாளர்கள் ஜியோமி சேல் ஆஃபர்களைப் பெற முடியும். தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள், வட்டியில்லா தவணை முறை எனப் பல சிறப்புச் சலுகைகள் இந்த சேல் கொண்டாட்டத்தில் வழங்கப்படுகின்றன.
ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5 சதவிகிதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடியும் உள்ளது.
இந்த ஜியோமி சேல் நேற்றிலிருந்து தொடங்கியுள்ளது. அமேசான் தளத்தில் வருகிற பிப்ரவரி 23-ம் தேதி வரையில் இந்த சிறப்புச் சலுகை விற்பனை தொடர உள்ளது.
Mi A2 ஸ்மார்ட்ஃபோனுக்கு அதிகப்பட்சமாக 2ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது. ரெட்மி 6 ப்ரோ மொபைலுக்கு அதிகப்பட்சமாக 7,146 ரூபாய் தள்ளுபடி உள்ளது. ரெட்மி 6A மொபைலின் தொடக்க விலையே 5,999 ரூபாய் மட்டுமே.
மேலும் பார்க்க: சினிமா18... மெர்சல் பட நஷ்டத்தால் கைவிடப்பட்டதா சங்கமித்ரா?
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.