108 மெகாபிக்சல் கேமிரா... 5X ஆப்டிகல் ஜூம்... வருகிறது ஜியோமி Mi CC9 Pro

108 மெகாபிக்சல் ரியர் கேமிரா உடன் 32 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிராவும் இடம்பெற்றுள்ளது.

108 மெகாபிக்சல் கேமிரா... 5X ஆப்டிகல் ஜூம்... வருகிறது ஜியோமி Mi CC9 Pro
Mi CC9 Pro
  • News18
  • Last Updated: October 29, 2019, 7:38 PM IST
  • Share this:
ஜியோமியின் அடுத்த ஸ்மார்ட்போன் வெளியீடாக Mi CC9 Pro இருக்கும். வருகிற நவம்பர் 5-ம் தேதி இப்புதிய போனை ஜியோமி வெளியிடுகிறது.

முதற்கட்டமாக சீனாவில் மட்டுமே இந்த போன் வெளியாகிறது. 108 மெகாபிக்சல் உடனான பென்டா கேமிரா, quad-LED ஃப்ளாஷ், 5X ஆப்டிகல் ஜூம் என அசத்தல் கேமிரா அம்சங்கள் கவர்வதாக உள்ளது. இப்புதிய Mi CC9 Pro போன் உடன் Mi டிவி 5 சீரிஸ், Mi வாட்ச் ஆகியன சந்தைப்படுத்தப்பட உள்ளன.

ஐந்து ரியர் கேமிராக்கள் உடனான இந்த போனின் டீசர் சமீபத்தில் ஜியோமியால் வெளியிடப்பட்டுள்ளது. பச்சை நிறத்திலான Mi CC9 Pro 6.4 இன்ச் ஹெச்டி AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Snapdragon 730G ப்ராசஸ்ர் உடனான இந்த போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்கும். 108 மெகாபிக்சல் ரியர் கேமிரா உடன் 32 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிராவும் இடம்பெற்றுள்ளது.


6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் இல்லை. சீனாவில் வெளியாகும் இந்தப் போனில் விலை 2,599 யுவான் ஆகும். இந்திய மதிப்பின் அடிப்பையில் 26 ஆயிரம் ரூபாய் ஆகும்.

மேலும் பார்க்க: ஜிபிஎஸ், வைஃபை, ஸ்பீக்கர் என அசத்தும் ஜியோமி ஸ்மார்ட்வாட்ச்..!

இது வடமாநில தீபாவளி கொண்டாட்டம்...
First published: October 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading