ஜியோமியின் முதல் 108 மெகாபிக்சல் கேமிரா... Mi CC9 Pro இன்று வெளியீடு!

5,260mAh பேட்டரி திறன் உடன் 30W அதிகவேக சார்ஜிங் திறனும் கொண்டுள்ளது.

ஜியோமியின் முதல் 108 மெகாபிக்சல் கேமிரா... Mi CC9 Pro இன்று வெளியீடு!
Mi CC9 ப்ரோ
  • News18
  • Last Updated: November 5, 2019, 2:58 PM IST
  • Share this:
ஜியோமியின் முதல் 108 மெகாபிக்சல் கேமிரா உடனான Mi CC9 Pro ஸ்மார்ட்போன் இன்று வெளியிடப்படுகிறது.

முதற்கட்டமாக சீனாவில் மட்டுமே இந்த போன் வெளியாகிறது. 108 மெகாபிக்சல் உடனான பென்டா கேமிரா, quad-LED ஃப்ளாஷ், 5X ஆப்டிகல் ஜூம் என அசத்தல் கேமிரா அம்சங்கள் கவர்வதாக உள்ளது. நான்கு கேமிரா சென்சார்கள் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலமாக உள்ளது.

Mi CC9 Pro 6.47 இன்ச் ஹெச்டி AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Snapdragon 730G ப்ராசஸ்ர் உடனான இந்த போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்கும். 108 மெகாபிக்சல் ரியர் கேமிரா உடன் 32 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிராவும் இடம்பெற்றுள்ளது. 5,260mAh பேட்டரி திறன் உடன் 30W அதிகவேக சார்ஜிங் திறனும் கொண்டுள்ளது.


சீனாவில் மட்டுமே தற்போதைய சூழலில் கிடைக்கும் இந்த Mi CC9 Pro 6ஜிபி+ 128 ஜிபி உடனான மாடல் 28 ஆயிரம் ரூபாய் (இந்திய மதிப்பில்), 8ஜிபி + 128 ஜிபி ரகம் 31,200 ரூபாய், 8ஜிபி+ 256 ஜிபி மாடல் 35 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 15 ஆயிரம் ரூபாய்க்குள் உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இதோ!

விஸ்வாசம் வசூலை முந்தியதா பிகில்?
First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading