Mi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்!

வைஃபை இணைப்புடன் Mi water purifier இருப்பதால் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே இயக்க முடியும்.

Web Desk | news18
Updated: September 17, 2019, 3:19 PM IST
Mi பேண்ட், Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம்... 2020ஐ ஸ்மார்ட் ஆக்கும் ஜியோமி அறிமுகங்கள்!
ஜியோமி அறிமுகங்கள்
Web Desk | news18
Updated: September 17, 2019, 3:19 PM IST
2020-ம் ஆண்டு முதல் உங்கள் அன்றாட வாழ்வை ஸ்மார்ட் ஆக்க ஜியோமி நிறுவனம் பல டெக் தயாரிப்புகளை இன்று அறிமுகம் செய்துள்ளது.

‘ஸ்மார்டர் லிவ்விங் 2020’ என்ற நிகழ்வை இன்று ஜியோமி நிறுவனம் நடத்துகிறது. இந்த நிகழ்வில் புதிய Mi பேண்ட் 4, 65 இன்ச் Mi டிவி, Mi நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகிய தயாரிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இன்று Mi டிவி-க்களில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியீடு எப்போது இருக்கும் என்ற அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது.

ஜியோமியின் புதிய வெளியீடுகள் குறித்த அறிவிப்பை ஜியோமி இந்தியா யூட்யூப் சேனல் அல்லது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்போது அறிமுகமாகி உள்ள Mi பேண்ட்-ன் விலை 2,499 ரூபாய். இந்த ஃபிட்னஸ் ட்ராக் கைக்கடிகாரத்தில் போன் மெசேஞ், வாட்ஸ்அப் மெசேஞ் போன்றவற்றின் நோட்டிஃபிகேஷன் கிடைக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரையில் நீடிக்கும்.


65 இன்ச் Mi டிவி-யும் இன்று வெளியாகிறது. இதுவரை வெளியான Mi டிவி-க்களில் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படவில்லை. 65 இன்ச் டிவியின் இந்த இணைப்பு இருக்குமா என்பது குறித்த விரைவில் தெரியவரும். ஸ்மார்ட் இல்லங்களை ஸ்மார்ட் ஆகும் Mi water purifier இயந்திரத்தை அறிமுகம் செய்கிறது.

4 கட்ட சுத்திகரிப்பு கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. PP காட்டன் ஃபில்டர், ஆக்டிவேடட் கார்பன் முதற்கட்ட ஃபில்டர், ஆர் ஓ ஃபில்டர், இறுதி கார்பன் ஃபில்டர் ஆகிய நான்கு அடுக்கு சுத்திகரிப்பு முறைகள் உள்ளன. வைஃபை இணைப்புடன் Mi water purifier இருப்பதால் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே இயக்க முடியும்.

மேலும் பார்க்க: 1Gbps வேகத்திறன்...1000 ஜிபி இலவச டேட்டா...கவரும் ஏர்டெல் V-Fiber ப்ராட்பேண்ட்!

Loading...

மூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!
First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...