ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் ஜியோமி Mi A3...நேரடியாக அமேசானில் விற்பனைக்கு வருகிறது!

48+8+2 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமிராக்கள் பின்புறத்திலும் 32 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: August 14, 2019, 5:44 PM IST
ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் ஜியோமி Mi A3...நேரடியாக அமேசானில் விற்பனைக்கு வருகிறது!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 14, 2019, 5:44 PM IST
புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்ஃபோன் ரகமாக வெளிவருகிறது ஜியோமியின் Mi A3 ஸ்மார்ட்ஃபோன்.

சீன நிறுவனமான ஜியோமி கடந்த மாதம் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் புதிய Mi A3 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தியது. Mi A2-க்கு அடுத்ததாக அந்த வரிசையில் Mi A3-யும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வெளியீட்டுத் தேதியை ஜியோமியும் அமேசான் தத்தமது தளத்தில் அறிவித்துள்ளன.

48+8+2 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமிராக்கள் பின்புறத்திலும் 32 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. Qualcomm Snapdragon 665 SoC திறனுடன் 6.1 இன்ச் ஹெச்டி OLED டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பு, விரல்நுனி ஸ்கேனர் என அசத்தல் அம்சங்களுடன் Mi A3 கவர்கிறது.


Mi A3 ஸ்மார்ட்ஃபோனின் பேட்டரி திறன் 4,030 mAh ஆக உள்ளது. 18W வரையிலான சார்ஜர் திறன் பொருந்தும் என்றாலும் ஃபோன் உடன் ஜியோமி சார்பில் 10W சார்ஜர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் ஸ்பெயினில் கடந்த மாதம் Mi A3 அறிமுகப்படுத்தப்பட்ட போது அறிவிக்கப்பட்டவை ஆகும். இதே அம்சங்களுடன் Mi A3 இந்தியாவிலும் அறிமுகம் ஆகுமா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.

மேலும் பார்க்க: இனி உங்கள் விரல் ரேகைதான் பாஸ்வேர்டு... ஆண்ட்ராய்டு-க்கு கூகுளின் மாற்றம்!
First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...