• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 108MP ப்ரைமரி கேமரா, 5,000mAh பேட்டரி உட்பட பல்வேறு அம்சங்களுடன் Mi 11T, Mi 11T Pro ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம்!

108MP ப்ரைமரி கேமரா, 5,000mAh பேட்டரி உட்பட பல்வேறு அம்சங்களுடன் Mi 11T, Mi 11T Pro ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம்!

Mi 11T & Mi 11T Pro ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம்

Mi 11T & Mi 11T Pro ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம்

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட Mi 11T Pro ஸ்மார்ட் போன் மாடலின் விலை 649 யூரோ (தோரயமாக ரூ.56,400).

  • Share this:
சியோமி 11டி (xiaomi 11T) மற்றும் சியோமி 11டி ப்ரோ (xiaomi 11T Pro) , சியோமி 11 லைட் 5 ஜி என்இ ( Xiaomi 11 Lite 5G NE) ஆகிய ஸ்மார்ட் ஃபோன்களை தனது குளோபல் ஈவன்ட்டில் சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. Mi 11T சீரிஸ் 3 புதிய ஹேண்ட் செட்ஸ்களை கொண்டுள்ள நிலையில் Xiaomi 11 Lite 5G NE ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் வரும் செப்டம்பர் 29ம் தேதி லாஞ்ச் செய்யப்படும் என்று சியோமி நிறுவனம் அறிவித்து உள்ளது. குறிப்பாக Xiaomi 11 Lite 5G NE இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Mi 11 Lite-ன் அப்கிரேடட் வெர்ஷனாக வருகிறது. சமீபத்திய மாடலில் டால்பி விஷன் சப்போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி SoC, மற்றும் 5ஜி இணைப்பு போன்ற வசதிகள் முந்தைய போனை விட மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

தவிர Xiaomi 11 Lite 5G NE, 256 ஜிபி வரை ஆன்போர்ட் ஸ்டோரேஜை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது Mi 11T மற்றும் Mi 11T Pro இவற்றின் விலைகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Mi 11T மற்றும் Mi 11T Pro மொபைல்களின் விலைகள்:

* 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட Mi 11T ஸ்மார்ட் போன் மாடல் 499 யூரோ (தோரயமாக ரூ. 43,300) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி கொண்ட போன் மாடலின் விலை 549 யூரோ. அதாவது தோராயமாக ரூ.47,700 ஆகும்.

* 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட Mi 11T Pro ஸ்மார்ட் போன் மாடலின் விலை 649 யூரோ (தோரயமாக ரூ.56,400). இதே போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி கொண்ட மாடலின் விலை 699 யூரோ (தோரயமாக ரூ.60,700). மேலும் இந்த போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியுடன் வருகிறது. இதன் விலை 749 யூரோ. (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.65,000).

Mi 11T Pro சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட் போன் ஸ்னாப்டிராகன் 888 SoC ப்ராசஸரால் இயக்கப்படுகிறது, மேலும் இது 12ஜிபி LPDDR5 RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 11-ல் MIUI 12.5 மூலம் இயங்குகிறது. இது 120W Xiaomi HyperCharge உடன் 5,000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது, அதே நேரத்தில் சப்போர்ட்டட் அடாப்டர் இதனுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் போன் 108MP ப்ரைமரி சென்சார், 8MP அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 5MP டெலிமேக்ரோ கேமரா என்று ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் வருகிறது. மெயின் கேமரா மூலம் 8K ரெசல்யூஷனில் வீடியோவை ரெக்கார்ட் செய்ய முடியும். முன்பக்கத்தில்16 MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது இந்த Mi 11T Pro டிவைஸ்.

Mi 11T Pro ஸ்மார்ட் போன் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டது. மேலும் இது Harman Kardon-ஆல் ட்யூன் செய்யப்பட்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட்டை பெறும் ஃபிங்கர் பிரிண்டர் ரீடர் சைடில் கொடுக்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5 ஜி, 4 ஜி, ப்ளூடூத் வி 5.2, வைஃபை 6, என்எப்சி ஆகியவை அடக்கம். இந்த டிவைஸுடன் 3 வருட Android OS அப்டேட்கள் மற்றும் நான்கு வருடசெக்யூரிட்டி அப்டேட்கள் அளிக்கப்படும் என்று சியோமி நிறுவனம் உறுதி அளிக்கிறது.

Also read... Redmi Smart Tv: ரெட்மியின் புதிய ஸ்மார்ட் டிவி - செப்டம்பர் 22ம் தேதி அறிமுகம்!

Mi 11T சிறப்பம்சங்கள்:

Mi 11T Pro ஸ்மார்ட் போனில் காணப்படும் பல சிறப்பம்சங்கள் Mi 11T டிவைஸிலும் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இரண்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடாக Mi 11T ஸ்மார்ட் போனில் MediaTek Dimensity 1200-Ultra SoC ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. வேறு சில மாற்றங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் 67W மற்றும் LPDDR4X ரேம் ஆகியவை அடங்கும். மற்றபடி Mi 11T Pro டிவைஸில் கொடுக்கப்பட்டிருக்கும் கேமராக்கள், பேட்டரி கெப்பாசிட்டி, டிஸ்பிளே மற்றும் சாஃப்ட்வேர் உட்பட மற்ற அனைத்தும் அதே தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: